பொது செய்தி

தமிழ்நாடு

ஆறு மாதங்களாக கிடப்பில் உள்ள ரோடு பணி

Added : ஆக 23, 2019
Advertisement

சாணார்பட்டி : சாணார்பட்டி பகுதியில் ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட ரோடு பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது நரிவிலாபட்டி. ஒன்றியத்தின் எல்லையில் அமைந்துள்ள இப்பகுதிக்கு, அதிகாரிபட்டியிலிருந்து கம்பிளியம்பட்டி செல்லும் ரோட்டில் அக்கரைப்பட்டியில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும். ஒரு கி.மீ., தூரம் உள்ள இந்த ரோட்டை அகலப்படுத்தும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு துவங்கியது.இதற்காக ரோட்டின் இருபுறங்களிலும் ஜல்லிகள் கற்களை பரப்புவதற்கு வசதியாக 2 அடி ஆழ பள்ளம் தோண்டப்பட்டது. அத்துடன் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் உட்பட பலரும் ரோட்டோர பள்ளத்தில் சறுக்கி விழுந்தனர். பொது மக்கள் போராடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளம் தோண்டிய பகுதிகளில் ஜல்லிக் கற்களால் நிரப்பப்பட்டது. அதுவும் முழுமையாக நிரப்பப்படவில்லை.அதன்பின் எந்த பணியும் தொடரவில்லை. ரோடு வளைவுகளில் ஜல்லிக் கற்கள் சிதறிக்கிடப்பதால் விபத்து தொடர்ந்து நடக்கின்றது. எனவே ரோடு விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X