பா.ஜ.,வின் பழிவாங்கும் செயல்

Added : ஆக 23, 2019
Advertisement

புதுச்சேரி:'சிதம்பரத்தை கைது செய்திருப்பது, மத்திய பா.ஜ., அரசின் பழிவாங்கும் செயல்' என, புதுச்சேரி காங்., தலைவர் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்., முக்கிய தலைவர்களில் ஒருவருமான சிதம்பரம் மீது பொய் வழக்கு போட்டு, அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்துள்ளது, மிகவும் கண்டிக்கதக்கது. சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பா.ஜ., அரசு உள் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவரை கைது செய்து, ஜனநாயக மாண்புகளை மோடி, அமித்ஷா சிதைத்துள்ளனர். காங்., கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த பா.ஜ., துடிக்கிறது. அவர்களின் எண்ணம் என்றென்றும் ஈடேறாது. அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள துணிவின்றி, அரசு இயந்திரத்தை தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்தி சுகம் காணும் செயல் நெடுநாள் நீடிக்காது.தேச ஒற்றுமைக்காகவும், நாட்டு மக்கள் நலனுக்காகவும் என்றென்றும் பாடுபடும் காங்., கட்சியை, மக்கள் மனதில் இருந்து எந்த சக்தியாலும் நீக்க முடியாது. பா.ஜ.,வின் சர்வாதிகார, மக்கள் விரோத போக்கினை நாட்டு மக்களிடம் காங்., தொடர்ந்து எடுத்துரைக்கும் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரின் வழிகாட்டுதலோடு, மனம் தளராமல், லட்சிய பயணத்தை காங்., தொண்டர்கள் மேற்கொள்வார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X