பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முனைவோருக்கு ரூ.30 லட்சம் மானிய கடன்: விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஆக 23, 2019
Advertisement

திண்டுக்கல் : சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் புதிய தொழில் முனைவோர் மூலம் உருவாகவும் தமிழக அரசால் 'புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் துவங்கிட இத்திட்டத்தின் கீழ் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினர் 21 வயது முதல் 35 வயதுக்குள்ளும், சிறப்பு பிரிவினர் 21 முதல் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.பயனாளிகள் 3 ஆண்டுக்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் தொடங்குவோருக்கு 25 சதவீதம் மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.30 லட்சம்) கூடிய ரூ.10 லட்சம் முதல் 5 கோடி வரை கடனுதவி வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 15 நாட்கள் கட்டாய தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். வியாபாரம் மற்றும் நேரடி விவசாயம் செய்வோர் இதில் பயன்பெற இயலாது.பயனடைய விரும்புவோர் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டையில் நேரடியாகவோ, 0451 247 0893 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து தொழிற்கடன் பெறலாம் என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X