பொது செய்தி

தமிழ்நாடு

இழப்பீடு தராததால் '12 எச்' அரசு பஸ் ஜப்தி

Added : ஆக 23, 2019
Advertisement

கோவை:விபத்தில் கால் முறிவு ஏற்பட்டவருக்கு, இழப்பீடு தராததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.துடியலுார் அருகேயுள்ள என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்த ரேணுகோபால்,56, கடந்த 2010, ஜூன், 16 ல், மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்றார். கோவை- கோத்தகிரிக்கு சென்ற அரசு பஸ், ரேணுகோபால் மீது மோதியதில், இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.இழப்பீடு கோரி, கோவை எம்.சி.ஓ.பி., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த கோர்ட், 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, 2016 ல் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்க தவறியதால், வட்டியுடன் சேர்த்து ரூ.22 லட்சமாக அதிகரித்தது.அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. அதன் பேரில், சிட்கோ- காந்திமாநகர் செல்லும், தடம் எண்: 12 எச், அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X