பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலா குறித்து சட்டசபை ஏடுகள் குழு ஆய்வு

Added : ஆக 23, 2019
Advertisement

கொடைக்கானல் : கொடைக்கானலில் சட்டசபை ஏடுகள் குழு சுற்றுலாத்துறை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தியது.தமிழக சட்டசபையின் ஏடுகள் குழுத் தலைவர் சத்யநாராயணன் தலைமையில் குழுவினர் கடந்த இரு தினங்களாக கொடைக்கானலில் முகாமிட்டிருந்தனர். கலெக்டர் விஜயலட்சுமி, ஏடுகள் குழு உறுப்பினர்கள், ஆர்.டி.ஓ., சுரேந்திரன் உட்பட துறை ரீதியான அலுவலர்கள் பங்கேற்றனர்.சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டறிக்கையை தாமதமின்றி சமர்ப்பிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. சுற்றுலா மேம்பாடு, வளர்ச்சி பணிகள் குறித்து விவாதித்தனர். சுற்றுலா இடங்களை பயணிகள் அறிந்து கொள்ள வழிகாட்டும் பலகைகள், நவீன கழிப்பறை வசதிகள், சீசன் தருணங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது, மல்டி லெவல் கார்பார்க்கிங் திட்டத்தை துரிதப்படுத்துவது, கொடைக்கானல் ஏரியை பாதுகாத்து பொலிவு பெறச் செய்தல், நகராட்சி புதிய படகு குழாம் விரைந்து செயல்படுத்துதல், நகராட்சி பகுதி வார்டுகளில் பெயர் பலகை வைத்தல், ஏரி நடைமேடையை மேம்படுத்தல், பேரிஜம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று வர பஸ் வசதி என பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். பின்னர், ரோஜா தோட்டம், சுற்றுலா வளர்ச்சி கழக படகு குழாம் உள்ளிட்ட இடங்களை குழுவினர் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X