பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி கடன் செலுத்த 'டைம்' வேணும் 'கோஸ்மா' புதிய தொழில் அமைப்பு கோரிக்கை

Added : ஆக 23, 2019
Advertisement

போத்தனுார்:சுந்தராபுரத்தில் 'கோஸ்மா' எனும், தொழில்முனைவோருக்கான, புதிய அமைப்பு துவக்கப்பட்டது.சுந்தராபுரம், சிட்கோ உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் ஏராளமான சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழில்முனைவோர் இணைந்து, 'கோயம்புத்துார் தெற்கு சிறு மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத்தை'(கோஸ்மா) துவக்கியுள்ளனர்.அமைப்பின் தலைவராக சுரேஷ்குமார், துணை தலைவராக பிரகாஷ், செயலாளராக இளையராஜா, துணை செயலாளர்களாக குமாரசாமி, பால்ராஜ், பொருளாளராக ராஜா, துணை பொருளாளராக ஆர்.ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 13 பேர் கொண்ட நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.இதன் முதல் கூட்டம், காந்தி நகரிலுள்ள அலுவலகத்தில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை போக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி கடனை கட்டுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு, வட்டி தள்ளுபடி ஆகியவற்றை, செய்து தரவேண்டும். ஜாப் ஆர்டர் செய்வோருக்கான ஜி.எஸ்.டி.,யை, 18 சதவீதத்தில் இருந்து, ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும்.ஜாப் ஆர்டர் தருவோர், அப்பணியை செய்தவர்களுக்கு குறைந்தபட்சம், மூன்று மாத அவகாசத்தில்தான் தொகையை தருகின்றனர். ஆதலால், ஜி.எஸ்.டி., செலுத்துவதற்கான கால அவகாசத்தையும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாக மாற்றியமைக்க வேண்டும். ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை மாற்ற, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X