பொது செய்தி

தமிழ்நாடு

கனரக வாகனங்களால் இடையூறு; நடவடிக்கை இல்லாததால் பாதிப்பு

Added : ஆக 23, 2019
Advertisement

போடி : போடியில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என போலீசார் எச்சரிக்கை போர்டு வைத்தும் செயல்பாட்டிற்கு வராததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். போடி ஸ்டேட் பாங்க் செல்லும் ரோட்டில் ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அருகே பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெராக்ஸ் சென்டர்கள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. டூவீலர், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதோடு சரக்கு ஏற்றி செல்ல கூடிய கனரக வாகனங்களும் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. பள்ளி முன்பாக ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். மாணவர்கள் பள்ளி செல்லும், விடக்கூடிய நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மூலம் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கனரக வாகன ஓட்டுனர்கள் கண்டு கொள்ளாமல் தாரளமாக செல்வதால் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றி, பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X