பொது செய்தி

தமிழ்நாடு

வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி., பற்றிய புரிதல் வேண்டும்; இணை கமிஷனர் பேச்சு

Added : ஆக 23, 2019
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சரக்கு மற்றும் சேவை வரியில் ரிட்டர்ன் தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜி.எஸ்.டி., உதவி கமிஷனர் குணசேகரன் தலைமை வகித்தார். இணை கமிஷனர் பாண்டிராஜா பேசியது: மன்னர் காலத்தில் இருந்தே வரி செலுத்தும் முறை உள்ளது. நம் நாட்டுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்த அனைவரும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும். வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி., பற்றிய புரிதல் வேண்டும். பொதுமக்களை குழப்ப கூடாது. தெரியாத தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த ஒவ்வொருவரும் விற்பனை மற்றும் கொள்முதல் விவரங்களை மாதந்தோறும் சமர்ப்பிக்க வேண்டும். இதில் லாப, நஷ்ட கணக்கு மற்றும் வரி செலுத்துவதில் தவறு செய்தால் அதை சரி செய்யும் வரை அதற்கான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கொள்முதல், விற்பனை விவரம் மற்றும் அந்த பொருளுக்கு ஜி.எஸ்.டி., வசூலித்தது உள்ளிட்ட பரிவர்த்தனைகள் குறித்து ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்தவர்கள் ஜி.எஸ்.டி., உரிமம் பெற்றிருந்தால் ரத்து செய்து கொள்ளலாம். பண நெருக்கடி இருந்தாலும் தவறாமல் வரி செலுத்த வேண்டும், என அவர் பேசினார். ஆடிட்டர் சரவணக்குமார்,'வருமான வரி தாக்கல், ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் தாக்கல் செய்வது, அதற்கான விண்ணப்பத்தை ஆவணங்களுடன் சமர்ப்பிப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். தமிழ்நாடு நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் மற்றும் வணிகர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X