பொது செய்தி

தமிழ்நாடு

நாசா விண்வெளி வீரருடன் பேச மாணவர்களுக்கு அழைப்பு

Added : ஆக 23, 2019
Advertisement

கோவை:பார்க் கல்விநிறுவனங்களின் பொன் விழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக, விண்வெளி ஆராய்ச்சிகள் சார்ந்த விழிப்புணர்வை, மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஆக., 30ம் தேதி கணியூர் பார்க் கல்விநிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, பார்க் கல்விக்குழுமங்களின் சி.இ.ஓ., அனுஷா , நிருபர்களிடம் கூறியதாவது: விண்வெளி வீரர்களின் அனுபவங்கள், மாணவர்களுக்கு ஓர் உற்சாகத்தை அளிப்பதுடன், ஆராய்ச்சி செயல்பாடுகளையும் மேற்கொள்ள ஊக்குவிக்கும். அதன்படி, 'கோ4குரு இன்க்' என்ற நிறுவனத்துடன் இணைந்து, ஆக.,30ல் கலந்தாய்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று விண்வெளி வீரர் டான் தாமஸ் அனுபவங்களை அறிந்து கொள்ளலாம். கேள்வி பதில் நேரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள், 9944737011 என்ற எண்ணில் பேசலாம். அரசு, மாநகராட்சி பள்ளி மாணவர்கள், இந்நிகழ்ச்சியில் இலவசமாக பங்கேற்கலாம். இவ்வாறு, அவர் கூறினார். கோ4குரு இன்க் நிறுவன சி.இ.ஓ., காயம்பூ ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X