பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் புதிய கட்டடங்கள் திறப்பு

Added : ஆக 23, 2019
Advertisement

கூடலுார் : கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் ரூ. பல லட்சம் மதிப்பீட்டிலான உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், தையலகப்பிரிவு ஆகியவற்றை கல்லுாரி நிறுவனச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நிர்மலானந்தநாத சுவாமி திறந்து வைத்தார்.தமிழ்நாடு ஒக்கலிகர் சங்க முன்னாள் தலைவர் கணபதி, ஈரோடு பாரா மெடிக்கல் கல்லுாரி தாளாளர் ராமச்சந்திரா, கல்லுாரி இணைச் செயலாளர் வசந்தன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ரேணுகா வரவேற்றார். கல்லுாரி நிறுவனச் செயலாளர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இதனைத் தொடர்ந்து பாலகங்காதரநாதசுவாமியின் நினைவு மண்டபம் கட்டுவதற்கு கல்லுாரி சார்பில் செயலாளர் , ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை நிர்மலானந்தநாத சுவாமியிடம் வழங்கினார்.புத்தக் கண்காட்சி, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், ஆதிசுஞ்சனகிரி மடத்தை சேர்ந்த சுவாமிகள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X