பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ ஆலோசனை

Added : ஆக 23, 2019
Advertisement

திண்டுக்கல் : கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் மகளிர் நலன் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை சார்ந்த நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் பழநி அக்ஷயா அகாடமி பள்ளியில் ஆக., 25ல் காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடக்கிறது.கர்ப்பப்பை, சினைப்பை கட்டி, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, சிறுநீர்ப் பை இறக்கம், சினைப்பை புற்று நோய் கட்டி, மாதவிலக்கு பிரச்னை, பாலிசிஸ்டிக் ஓவரிகள், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி, தும்மலின்போது சிறுநீர்க் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்.கர்ப்பப்பை வாய் பரிசோதனை ஸ்கேன், மார்பக பரிசோதனை மற்றும் கால்பாஸ்க்கோப்பி தேவைபடுவோருக்கு முகாமில் வசதி செய்யப்பட்டுள்ளது. லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்கு 50 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்படும். 90039 12121 ல் இலவச முன்பதிவு செய்யலாம் என ஜெம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X