சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அலைபேசி டவர் அமைப்பதாக கூறி விவசாயிகளிடம் நுாதன பண மோசடி

Added : ஆக 23, 2019
Share
Advertisement
வேடசந்துார் : வேடசந்துார் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், விவசாயிகள் வருமானத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். இந்நிலையில்தான் விவசாயிகளிடம் 'டவர் மோசடி' நடந்ததுள்ளது. இங்கு புளியமரத்துக்கோட்டை ரோடு பகுதியில் வசிக்கும் விவசாயி ராமன் 58. தென்னை மரங்கள், ஆடு மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.இவரது தோட்டத்திற்கு வந்த இருவர், 'தாங்கள் அலைபேசி டவர் அமைக்கும்

வேடசந்துார் : வேடசந்துார் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், விவசாயிகள் வருமானத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். இந்நிலையில்தான் விவசாயிகளிடம் 'டவர் மோசடி' நடந்ததுள்ளது. இங்கு புளியமரத்துக்கோட்டை ரோடு பகுதியில் வசிக்கும் விவசாயி ராமன் 58. தென்னை மரங்கள், ஆடு மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.இவரது தோட்டத்திற்கு வந்த இருவர், 'தாங்கள் அலைபேசி டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். உங்கள் நிலத்தின் ஓரமான பகுதியில் இடம் தந்தால் அங்கே டவர் அமைக்கிறோம். ஒரு டவர் அமைக்க அட்வான்ஸாக ரூ.50 ஆயிரம், மாதம் ரூ..15 ஆயிரம் வாடகையும் கிடைக்கும்'' என்றனர்.அவர்களை நம்பிய ராமன், இடம் தர ஒத்துக் கொண்டார். வந்த நபர்கள், 2 டவர்கள் அமைக்க இடம் தேர்வு செய்து, அதில் சுண்ணாம்பு கோடு போட்டு, சில குச்சிகளையும் ஊன்றிச் சென்றனர். பின்னர், ராமனிடம், ''எங்களுக்கு கமிஷன் தனியாக ரூ.30 ஆயிரம் வேண்டும்' என கேட்டனர். அவர்களை நம்பிய ராமன், கடன் வாங்கி ரூ.30 ஆயிரம் கொடுத்துள்ளார். அதன்பின் அவர்கள் 2 மாதங்களாகியும் வரவில்லை. இதேபோல புளியமரத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த இருவரிடமும் ரூ.13 ஆயிரம் பெற்று சென்றுள்ளனர்.இது குறித்து விவசாயி ராமனிடம் கேட்டபோது, ''மொபைல் டவர் வருவதாகக்கூறி நம்பவைத்து, ரூ.36 ஆயிரம் பெற்றனர். பணம் கொடுத்து இரண்டரை மாதம் ஆகியும் தகவலே இல்லை. என்னைப் போல வேறு சிலர் ஏமாந்துள்ளனர்'' என்றார். போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X