'லாக்-அப்' சாவு வழக்கில் 3 போலீசாருக்கு ஜாமின்

Added : ஆக 23, 2019
Advertisement

புதுச்சேரி:ஒதியன்சாலை போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த வழக்கில், மூன்று போலீசாருக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி கண் டாக்டர் தோட்டத்தில் விபசாரம் நடப்பதாக எழுந்த புகாரின்பேரில், அதேபகுதி சந்திரசேகர் என்பவரை, கடந்த 1993, டிசம்பர் 29ம் தேதி, விசாரணைக்காக, ஒதியன்சாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.விசாரணையின்போது மயங்கி விழுந்ததாக, சந்திரசேகரை போலீசார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீசார் அடித்து உதைத்ததால் சந்திரசேகர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, போலீசார் அடித்ததில் சந்திரசேகர் இறக்கவில்லை என, அறிக்கை வெளியானது. இதை ஏற்காமல், உறவினர்கள் போராட்டம் நடத்தியதால், ஜிப்மரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், போலீசார் அடித்ததால்தான் சந்திரசேகர் இறந்தார் என உறுதியானது.இதையடுத்து, அப்போதைய ஒதியன்சாலை சப் இன்ஸ்பெக்டர் கோபால்சந்தர், காவலர்கள் சுந்தரராஜன், தேவராஜ், லட்சுமணன், பிரேத பரிசோதனை செய்த டாக்டர் சீனிவாசன் உள்பட 8 பேர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கினை விசாரித்த புதுச்சேரி நீதிமன்றம், 8 பேரும் குற்றவாளிகள் என, கடந்த 2002ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி தீர்ப்பளித்தது. ரவிச்சந்திரன், ராமையன், ஆறுமுகம் ஆகியோருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், சுந்தர்ராஜன், தேவராஜ், லட்சுமணன், டாக்டர் சீனிவாசன் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விசாரணை காலத்தில் சப் இன்ஸ்பெக்டர் கோபால்சந்தர் இறந்ததால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இதனை, சென்னை ஐகோர்ட் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்தது. இதனை தொடர்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட காவலர்கள் ரவிச்சந்திரன், ஆறுமுகம், ராமையன் ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததுடன், ஜாமின் கேட்டும் மனு தாக்கல் மனு செய்தனர்.இம்மனு, நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மூன்று பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X