பொது செய்தி

தமிழ்நாடு

டாக்சி, ஆட்டோவில் பயணிக்கும் பெண்ணா நீங்க? போலீஸ் கமிஷனர் சொல்றதை படியுங்க!

Added : ஆக 23, 2019
Advertisement

கோவை:ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, பிக்கி புளோ அமைப்பு சார்பில், 'பெண்கள் பாதுகாப்பு' குறித்த, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.போலீஸ் கமிஷனர் சுமித் சரண் வகித்து பேசியதாவது:நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, நமது ஸ்மார்ட் போனில், பலவகையான செயலிகளை தரவிறக்கம் செய்து வைத்துள்ளோம்.
இவை பின்னணியில் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. நம் புகைப்படங்கள், தொடர்பு எண்களை மட்டுமல்ல, பயண விபரங்கள், விடுமுறைகள், நம் திட்டங்கள் என, அனைத்தையும் முகம் அறியாத யாரோ ஒருவர் இதன் வாயிலாக காண்காணிக்கவும், பயன்படுத்தவும் முடியும்.பெண்கள் பயணம் செய்யும் போது, தாங்கள் பயணிக்கும் கார், ஆட்டோ எண், ஓட்டுனர் குறித்த தகவல்களை, பெண்கள் தங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்; வாகனம் எங்கே பயணித்துக்கொண்டிருக்கிறது என்ற விபரங்களை தொடர்ந்து, தெரிவித்த வண்ணம் இருக்க வேண்டும்.நண்பர்களோடு இருக்க வேண்டும் என்பதற்காகவோ, அதிக நண்பர்கள் வேண்டும் என்பதற்காகவோ, தவறான நண்பர்களை தேர்ந்தெடுக்காதீர்கள்.உங்கள் பாதுகாப்பு மற்றும் நடத்தையில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். தவறுகள் நேர்ந்தால் போலீசாரின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்.சமூக ஊடகங்களில் பதிவிடப்படும், 'லைக்'குகளுக்காக வாழாதீர்கள்.
நாம் பகிரும் தகவல்கள், பார்க்கும் சம்பவங்கள் ஆரோக்கியமானதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.கல்லுாரி முதல்வர் சித்ரா, பிக்கி புளோ அமைப்பு தலைவர் பூனம் பாப்னா, போலீஸ் இன்ஸ்பெக்டர் (சட்டம் - ஒழுங்கு) லதா, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மல்லிகா உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.பெண்கள் தாங்கள் பயணிக்கும் கார், ஆட்டோ எண், ஓட்டுனர் குறித்த தகவல்களை, பெண்கள் தங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்; வாகனம் எங்கே பயணித்துக்கொண்டிருக்கிறது என்ற விபரங்களை தொடர்ந்து, தெரிவித்த வண்ணம் இருக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X