பொது செய்தி

தமிழ்நாடு

'தினமும் 10 கோடி லிட்டர் நீர் மறுசுழற்சி': 'ஜல் சக்தி அபியான்' திட்டக்குழு பாராட்டு

Added : ஆக 23, 2019
Advertisement
 'தினமும் 10 கோடி லிட்டர் நீர் மறுசுழற்சி': 'ஜல் சக்தி அபியான்' திட்டக்குழு பாராட்டு

திருப்பூர்:திருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலையங்களில், தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கு, 'ஜல் சக்தி அபியான்' திட்டக்குழு பாராட்டியுள்ளது.

மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் சுஜாதா சர்மா தலைமையில், 16 அதிகாரிகள் அடங்கிய, 'ஜல்சக்தி அபியான்' திட்டக்குழுவினர், திருப்பூர் மாவட்டத்தில், மழைநீர் சேமிப்பு, நீராதார பாதுகாப்பு தொடர்பாக, ஒன்றியம் வாரியாக ஆய்வு செய்து வருகின்றனர்.இக்குழுவினர், முருகம்பாளையம் சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று ஆய்வு நடத்தியபோது, மேலாண்மை இயக்குனர் பக்தவச்சலம், தலைவர் சுந்தரப்பன், இயக்குனர் மாதேஸ்வரன் ஆகியோர், சுத்திகரிப்பு தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்து விவரித்தனர்.

மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும் தொழில்நுட்பத்தை விளக்கினர்.மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் செந்தில்விநாயகத்திடம் கேட்டபோது,''இக்குழுவினர், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவு,'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம், திருப்பூரில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக பாராட்டினர். தினமும், 10 கோடிலிட்டர், மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதை கேட்டும், ஒரு சுத்திகரிப்பு மையம் மட்டும், மாதம், 1.77 கோடிரூபாய் செலவழித்து, சுத்தி கரிப்பு செய்வதை அறிந்தும், வியந்தனர்.

'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்ப செயல்பாட்டுக்கு, தேவையான உதவி பெற்றுத்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.ஒரு பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு, தினமும் மூன்று லட்சம் வீதம், மாதம் 60 லட்சம் ரூபாய் மின் கட்டண செலவு ஏற்படுகிறது இதில் சிறப்பு சலுகை வழங்க வேண்டுமென, மத்திய குழுவிடம் சாய ஆலை உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்தனர். மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, தகுந்த உதவி பெற்றுத்தரப்படுமென, குழு தலைவர் சுஜாதா சர்மா உறுதி அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X