பர்தா அணிந்த கொள்ளைக்காரி 24 மணி நேரத்தில் கைது

Added : ஆக 23, 2019
Advertisement


புதுச்சேரி,வயதான சகோதரிகளை கத்தியால் குத்தி, 3 சவரன் நகையை பறித்துச் சென்ற பெண்ணை, 24 மணி நேரத்தில், போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கோவிந்தசாலை பகத்சிங் வீதியில், சகோதரிகளான, லாரன்ட் கிளாரா, 70; தேவி, 65, ஆகிய இருவர் மட்டும் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் காலை, 11:௦௦ மணியளவில், இவர்களின் வீட்டுக்குள் புகுந்த, பர்தா அணிந்த பெண், இருவரையும் கத்தியால் குத்தி, 3 சவரன் நகையை பறித்துச் சென்றார்.
பெரியகடை போலீசார் விசாரணையில், பர்தா அணிந்த பெண், ஆட்டோவில் ஏறி, புது பஸ் நிலையம் சென்றது தெரிந்தது.
போலீசார் பஸ் நிலையம் சென்றபோது, அப்பெண், பர்தாவை கழற்றி, வேறு ஆட்டோவில் கோவிந்தசாலைக்கு செல்வது தெரிந்தது. ஆட்டோவை துரத்தி, பெண்ணை கைது செய்தனர். அவர், கோவிந்தசாலையைச் சேர்ந்த சுப்ரமணியன் மனைவி மங்களேஸ்வரி, 60, என்பது தெரிந்தது.
மங்களேஸ்வரி வாக்குமூலத்தில், 'தேங்காய் வியாபாரம் செய்து வருகிறேன். பண கஷ்டம் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு, நெருக்கடி கொடுத்தனர். யாரிடமாவது நகை திருடி, கடனை அடைக்க திட்டமிட்டேன். ஆனால், மாட்டிக் கொண்டேன்' என, தெரிவித்துள்ளார்.
****

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X