'வெள்ள சேதத்தை கணக்கிட மத்திய குழு அனுப்பப்படும்'

Added : ஆக 23, 2019
Advertisement

பனாஜி : 'மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் சேதத்தை கணக்கிட, மத்திய அரசின் சார்பில், விரைவில் குழு அனுப்பப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா தெரிவித்தார்.
சுகாதாரம், பாதுகாப்பு, சமூக நலன் குறித்த கருத்துக்களை, மத்திய அரசுடன், மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும், 24வது, மேற்கு மண்டல கவுன்சில், கூட்டம், கோவாவில், நேற்று நடந்தது.
இதில், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, மஹாராஷ்டிரா முதல்வர், தேவேந்திர பட்னவிஸ், குஜராத் முதல்வர், விஜய் ரூபாணி, கோவா முதல்வர், பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், அமித் ஷா பேசியதாவது:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள், சேத அளவை மதிப்பிட்டு, தங்கள் தேவைகள் குறித்து, மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்ப வேண்டும். ஆனாலும், மாநில அரசின் அறிக்கைக்காக காத்திருக்காமல், பாதிக்கப்பட்ட மாநிலங்களின் சேத மதிப்பை கணக்கிட, மத்திய அரசு சார்பில், அனைத்து மாநிலங்களுக்கும், விரைவில் குழு அனுப்பப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X