கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி கைது

Added : ஆக 23, 2019
Advertisement

பல்கார்: மஹாராஷ்டிரா மாநிலம், பல்கார் மாவட்டம், நலசோபாரா கிராமத்தை சேர்ந்தவர், சுனில் கதம், 36. இவரது மனைவி பிரனாளி. இவருக்கு சமீபத்தில், இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால், பிரனாளி மிகவும் அதிருப்தியடைந்து, கணவனிடம் தினமும் சண்டை போட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், இப்பிரச்னை தொடர்பாக, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், கணவனை, பிரனாளி, கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், சுனில் அதே இடத்தில் இறந்தார், பிரனாளியை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X