அரசியல் செய்தி

தமிழ்நாடு

20 லட்சம் மாணவருக்கு 'டேப்' :செங்கோட்டையன் தகவல்

Added : ஆக 23, 2019
Advertisement
 20 லட்சம் மாணவருக்கு 'டேப்' :செங்கோட்டையன் தகவல்

திருப்பூர்:''20 லட்சம் மாணவ, மாணவியருக்கு 'டேப்'கள் வழங்கப்படும்'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 36.50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, கலையரங்கத்தை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார்.அவர் பேசியதாவது:தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, நான்கு வித சீருடைகள் வழங்கப்படுகிறது.
அடுத்தாண்டு 'ஷூ'வும் வழங்கப்படும். வீரபாண்டி மேல்நிலைப்பள்ளியில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பறைகள் செப்., மாதம் இறுதிக்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். அரசு பள்ளிகளில் 8, 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் 20 லட்சம் பேருக்கு, மலேசியாவில் இருந்து தருவித்து, 'டேப்' வழங்க திட்டமிட்டுள்ளோம்.மாணவர்களை 'அப்டேட்' செய்ய, ஒவ்வொரு பள்ளியிலும், 'அடல் டிங்கரிங் லேப்' ரூ.20 லட்சம் செலவில், 5 ஆண்டுகளில் அமைத்து தரப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.அமைச்சர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள் நடராஜன், குணசேகரன், விஜயகுமார், முன்னாள் அமைச்சர் ஆனந்தன், கலெக்டர் பழனிசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X