370வது சட்டப்பிரிவு ரத்து:தேசிய அளவில் பா.ஜ.,பிரசாரம்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (12)
Advertisement
370 வது சட்டப்பிரிவு ரத்து:பிரசாரம்

புதுடில்லி,:ஜம்மு - காஷ்மீருக்கு, 370வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றி, தேசிய அளவில் தீவிர பிரசாரம் செய்ய, பா.ஜ., முடிவு செய்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு, அரசியல் அமைப்பு சட்டம், 370வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு, சமீபத்தில் ரத்து செய்தது.இதையடுத்து, 370வது பிரிவு நீக்கம் பற்றி, தேசிய அளவில் பிரசாரம் செய்ய, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது.





குறிப்பாக, சட்டசபை தேர்தல் நடக்க உள்ள, மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில், இதை முக்கிய பிரசாரமாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இது பற்றி, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றிய விபரம், மக்களிடம் சென்றடையும் வகையில், செப்டம்பர், 1 முதல், தேசிய அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.மாநில தலைநகர்கள், மாவட்ட தலைநகரங்கள், யூனியன் பிரதேசங்கள் என, 370 கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள்.இதற்காக, கட்சியின் செயல் தலைவர், ஜே.பி.நட்டா தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவில், மத்திய அமைச்சர்கள், பிரகலாத் ஜோஷி, கஜேந்திர சிங் ஷெகாவத், தர்மேந்திர பிரதான், ஜிதேந்திர சிங், உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.இவ்வாறு, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஆக-201904:02:23 IST Report Abuse
skv srinivasankrishnaveni அளவுக்கு மீறி இவ்ளோ கொடிகளைவச்சுண்டு என்னங்க செய்வாங்க ஒண்ணும் புரியவே இல்லீங்க எதற்கு இவ்ளோ பணவெறி கள்ளமா சேர்த்துமக்களை ஆளுறோம் என்று கொள்ளை அடிக்கவா நீங்கல்லாம் மந்திரி/எமேலே /எம்பி ஆனீங்களா? நீங்க அடிச்சக் கோடீயைவச்சு நாட்டை எவ்ளோன்னான்னா காக்கமுடியும் என்று எப்போவாச்சும் யோசிச்சீங்களா ஐயா பெருந்தனக்காரங்களே நம்ம நாட்டுலே பெரிய எக்கனாமிஸ்டுன்னுபட்டம் வாங்கிட்டு நாட்டையே கொள்ளை அடிச்சுமில்லியன் ஆயிருக்கீங்களே எல்லோரும் நீங்க அரசியல்லவர்ரச்ச எப்படி இருந்தீங்க?????????
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
23-ஆக-201908:22:29 IST Report Abuse
வல்வில் ஓரி பொருளாதார நிலை எல்லாம் நல்லாத்தான் இருக்கு அதை நாங்க பாத்துக்குறோம்... நீ முதல்ல அரசாங்க சொத்தை களவாடி யதற்கு பதில் சொல்லு.. அமைச்சராக இருந்து முறைகேட்டில் ஈடுபட்டதற்கு பதில் சொல்லு.. பொருளாதாரமாம்.. வீழ்ச்சியா ம்... பிச்சுப்புடுவேன் பிச்சு
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
23-ஆக-201907:07:27 IST Report Abuse
வல்வில் ஓரி யோவ்... அவங்க தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றி இருக்கிறார்கள். இத வெளியே சொல்லுகிறார்கள்.. இதுல என்னய்யா தப்பு?.. நீ வேறு ஒரு பிரச்சினையை வைத்து மூடப் பார்க்கிற.. இவ்வளவு வயித்தெரிச்சல் உடம்புக்கு ஆகாது இப்ப என்ன பெரிய பொருளாதாரப் பிரச்சினை? கார் கம்பெனி எல்லாம் மூடிக்கொண்டே வருது.. அதானே?.. சாலையின் ஓரத்தில் கூட நடக்க முடியவில்லை அவ்வளவு கார்கள்.. தெருவெல்லாம் வீட்டுக்கு வெளியே இரண்டு பக்கமும் காரர்களாக பார்க் பண்ணி வைத்திருக்கிறார்கள்.. இன்னும் கார்களை விற்றுக் கொண்டே இருந்தால் என்ன நடக்கும்?.. அதென்ன அரிசி பருப்பா.. தினமும் வாங்குவதற்கு?.. ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரி ஒரு செச்சுரேஷன் பாயிண்டை எட்டியவுடன் தேக்க நிலையை அடையத்தான் செய்யும்..
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
23-ஆக-201911:12:54 IST Report Abuse
Darmavanஇவ்வளவு கார்கள் போக ரோடுகள் இல்லை.புகையும் காற்றுமணடலத்தை நாசமாக்குகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X