அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்தின் உத்தரவுகள்:ஆராய சி.பி.ஐ., திட்டம்

Added : ஆக 23, 2019
Advertisement


புதுடில்லி:காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, காங்., மூத்த தலைவர் சிதம்பரம், நிதி அமைச்சராக இருந்த காலத்தில், அன்னிய முதலீடு செய்வதற்கு அளிக்கப்பட்ட அனுமதிகளில் மோசடி நடந்துள்ளதா என்பதை விசாரிக்க, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2004 முதல், 2014 வரை, மத்தியில் அமைந்திருந்தது. அப்போது, 2004 மே, 22 முதல், 2008 நவ., 30 வரையிலும்; பின்னர், 2012 ஜூலை, 31 முதல், 2014 மே, 26 வரையிலும், காங்., மூத்த தலைவர், சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார்.ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பான வழக்கில், சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் நிதி அமைச்சராக இருந்தபோது, அன்னிய முதலீடு செய்வதற்கு வழங்கப்பட்ட மற்ற அனுமதிகளிலும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க, சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது.மேலும், இந்த அனுமதிகளில், சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீடு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X