சம்பவம் செய்தி

தமிழ்நாடு

17 வயது சிறுமி கர்ப்பம்:18 வயது சிறுவன் கைது

Added : ஆக 23, 2019
Advertisement

ஆரணி, :ஆரணியில், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய, 18 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, பிளஸ் 2 முடித்து, வீட்டில் இருந்துள்ளார். ஐ.டி.ஐ., படித்து, கூலித் தொழிலாளியாக இருந்த, 18 வயது சிறுவனும், சிறுமியும் காதலித்தனர்.இவர்கள் காதலுக்கு, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் பிப்., 6ல், காஞ்சிபுரம் சென்று, திருமணம் செய்து கொண்டனர். அவர்களை, இரு வீட்டாரும் சேர்க்கவில்லை. அதே பகுதியில் தனிக் குடித்தனம் நடத்தினர்.
இந்நிலையில், சிறுமி, நான்கு மாத கர்ப்பமானார். சிகிச்சைக்காக, ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு, 18 வயது நிரம்பாததை அறிந்தனர்.
அவர்கள் அளித்த தகவல்படி, ஆரணி ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் ருக்மணி, சிறுமியை மீட்டு, திருவண்ணாமலை பெண்கள் காப்பகத்தில் சேர்த்தார். 18 வயது சிறுவன் மீது, ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். சிறுவனை, போலீசார் கைது செய்து, கடலுாரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X