அரசியல் செய்தி

தமிழ்நாடு

செப்., 4ல் சொந்த ஊரில் வைகோவுக்கு வரவேற்பு

Added : ஆக 23, 2019
Advertisement


சென்னை, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோவிற்கு, அடுத்த மாதம், 4ம் தேதி, அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில், கிராம மக்கள் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
உடல் நலக்குறைவால், வைகோ, சென்னை, போரூரில் உள்ள, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர், நலமுடன் உள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், செப்., 4 முதல், வைகோ பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என, அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, ம.தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கை:
வைகோவுக்கு, செப்., 4, மாலை, 4:00 மணிக்கு, கலிங்கப்பட்டியில், கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மறுநாள், 5ம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்தில், சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்கள் நீடிக்க வலியுறுத்தி, சங்கரன்கோவிலில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், வைகோ பங்கேற்க உள்ளார்.
செப்., 7ல், சென்னை, எழும்பூரில், நெல்லை பைந்தமிழ் மன்றம் சார்பில், 'காவல் கோட்டம், வேள்பாரி' நுால்களின் ஆசிரியர், வெங்கடேசனுக்கு, இயற்றமிழ் வித்தகர் விருது வழக்கும் விழா நடக்கிறது. இதில், வைகோ பங்கேற்கிறார்.
செப்., 8 முதல், 15 வரை, சென்னையில், அண்ணாதுரை பிறந்தநாள விழா மாநாட்டுப் பணிகளை மேற்கொள்கிறார்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X