பொது செய்தி

இந்தியா

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

குருவாயூரப்பன் மீது நாராயண பட்டத்திரி பாடிய நாராயணீயம். இதைப் படித்தால்
கேட்டது கிடைக்கும். சொன்னது பலிக்கும்.

* மகாவிஷ்ணுவே! கிருஷ்ணா! வேதத்தால் போற்றப்படும் சச்சிதானந்த வடிவம் கொண்டவனே! கோபியரின் மனங்களில் இருப்பவனுமாகிய உன்னை, துன்பம் தீர அடியேன் வணங்குகிறேன்.

* மும்மூர்த்திகளில் உயர்ந்து திகழும் சர்வேஸ்வரா! கருமை நிறக் கண்ணா! மந்திர சாஸ்திரங்களில் எங்கும் நிறைந்திருப்பது நீயே என சொல்லப்பட்டுள்ளது. உன் திருப்பாதங்களைப் போற்றுகிறேன்.

* தேவாதி தேவனே! எல்லா உயிருக்கும் உயிராக விளங்கும் கிருஷ்ணரே! உண்மையில்லாத பொருட்களில் விருப்பம் கொண்டு துன்பம் அடையும் மனிதன், உன் திருவடியை வணங்கினால் எல்லா இன்பத்தையும் அடைவான். அவ்வாறு அருள் செய்ய வேண்டுமென உன் பாதங்களை வணங்குகிறேன்.

* எங்கும் நிறைந்த பரம்பொருளே! உடலாலும், மொழியாலும்,உள்ளத்தாலும் இப்பூமியில் எதையெல்லாம் செய்கிறேனோ அத்தனையையும் உன்னிடத்திலேயே சமர்ப்பிக்கிறேன். உன் திருவடியில் சரணடைகிறேன்.

* உன்னிடம் சரணடைந்தவர்கள், எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவார்கள். தேவாதி தேவனே! அப்படிப்பட்ட நல்லவர்களின் தொடர்பு எப்போதும் கிடைக்கட்டும். அவர்களுடைய நல்ல வார்த்தையால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும்.

* ஜகந்நாதா! ஹரி! பஞ்சபூதம், பிரபஞ்சம், பறவை, மீன், விலங்கு முதலியவற்றையும், நண்பர்கள், எதிரிகளையும் கூட, உன்னுடைய உருவமாகவே உள்ளத்தில் நினைக்கிறேன். இவ்விதம் வழிபடுவதால் பக்தியும், ஞானமும் வாய்க்கும் பேறு பெற்றேன்.

* பெருமானே! உன்னிடம் ஒன்றி விட்டதால் வழக்கமான பசி, தாகம் மறந்து விட்டது. கண நேரமும் உன்னை மறவாமல் செயல்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். மனத்தளர்ச்சி இப்போது இல்லை. உன் அருளால் மகிழ்ச்சியோடு எங்கும் உலாவுகிறேன்.
* பெருமாளே! கலிகாலத்தில் உன் பெயரைச் சொன்னாலும், உன்னைப் பற்றிப் பாடினாலுமே போதும்! உன் அருளைப் பெற்று விடலாம். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் எல்லாரும் இந்த யுகத்தில் பிறக்க ஆசைப்படுகின்றனர். பாக்கியவசத்தால் இந்தக் கலியுகத்தில் பிறந்த என்னை ஏற்றுக் கொள்வாய்!
* புருஷோத்தமா! கங்கா ஸ்நானம், கீதை வாசித்தல், காயத்ரி மந்திரம் சொல்லுதல், துளசி அணிவித்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக்ராம பூஜை, ஏகாதசி விரதம், ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் இவை எட்டும் உன் அருளைப் பெற்றுத்தரும். இந்த எட்டு மார்க்கங்களிலும் என்னை ஈடுபடுத்தி, உன்னை அடைய அருள் புரிவாயாக.


ஜன்னல் வழியே தரிசனம்தன் கணவர் குழந்தையாக இருந்த போது எப்படி இருந்தார் என்பதை அறிய ருக்மணி ஆசைப் பட்டாள். அதனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு சிலை செய்தாள். அச்சிலையே உடுப்பியில் இன்று வழிபாட்டில் உள்ளது. மத்வாச்சாரியாரால் பூஜிக்கப்பட்ட இந்த கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ளது.

இக்கோயிலுக்கு வாசல் கதவுகள் இல்லை. குழந்தை வடிவில் சுவாமி காட்சி தருகிறார். வலக்கையில் தயிர் கடையும் மத்தும், இடக்கையில் வெண்ணெய் ஏந்தியுள்ளார். ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டும் உண்டு. கருவறையின் நுழைவுவாயில் விஜயதசமி அன்று மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் சன்னதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக தரிசிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
23-ஆக-201904:42:44 IST Report Abuse
vasumathi கவலை படாதே, எல்லாம் நன்றாகவே நடக்கும் என்று சொல்லும் கண்ணன் , என்றும் நமது மனநல மருத்துவர். . மோட்டிவேஷனல் பேச்சாளி . அவர் சொன்னபடி கேட்டால் என்றும் எப்போதும் எங்கேயும் யாருக்கும் சந்தோஷமே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X