அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு தலை குனிவு அமைச்சர் சண்முகம் தாக்கு

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement



விழுப்புரம், ''முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தால், தமிழகம் தலை குனிந்து நிற்கிறது,'' என, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறினார்.விழுப்புரத்தில் அவர் கூறியதாவது:
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது தொடரப்பட்டது, கிரிமினல் வழக்கு. இந்திய நாட்டின் நிதி அமைச்சராக இருந்து, பொருளாதாரத்தை சீரழித்து, கொள்ளையடித்து, வெளிநாட்டிற்கு பணத்தை கடத்தியது, மிகப்பெரிய குற்றம்.
இந்தியாவிலேயே முதல் கிரிமினல் சிதம்பரம் என்பது, நிரூபிக்கப்பட்டுள்ளது. கனிமொழியால், தமிழகத்தின் மானம் கப்பலேறியது. தற்போது, சிதம்பரத்தால், தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.
ஒரு வழக்கை சந்திக்க தைரியம் இல்லாத இவர்கள், எங்களைப் பற்றியும், எங்களின் ஆட்சியைப் பற்றியும் பேசுகின்றனர். தேர்தல் காலத்தில், எங்களை சிறைக்கு அனுப்புவோம் எனக் கூறினர். இன்று கடவுளாக பார்த்து, அவர்களுக்கு, சிறையில் களி தின்னும் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்.இவ்வாறு அமைச்சர் சண்முகம் கூறினார்.
****

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesh - madurai,இந்தியா
23-ஆக-201908:10:48 IST Report Abuse
ganesh ஐயா திரு சண்முகம் அவர்களே மறந்து பேசாதீர்கள் நீங்கள் அம்மா என்று அழைக்கும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இறக்கும்போதுகூட குற்றவாளியாக இறந்தார் இதை மறந்து என்ன என்னவோ பேசுகிறார். ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டை இரண்டு கட்சிகளும் சேர்ந்து குற்றவாளிகள் நிறைந்த நாடாக மாற்றாமல் இருந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X