அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாஜி மத்திய அமைச்சர் கைதை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

Added : ஆக 23, 2019
Advertisement

விழுப்புரம்:முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ., கைது செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரம் மாவட்ட காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட காங்., இளைஞர் காங்., மற்றும் சிறுபான்மை பிரிவு சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ., கைது செய்ததை கண்டித்து, காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.முன்னாள் மாவட்ட தலைவர் குலாம்மொய்தீன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு பாலசுப்ரமணியம், சிவா, ஆறுமுகம், முபாரக்அலி, சுரேஷ்ராம் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்., தலைவர் ஸ்ரீராம், துணைத் தலைவர்கள் சுந்தர், சேட்டு என்கிற இக்பால், பாலன், மகாலிங்கம், மாவட்ட செயலாளர் சுகுமாறன் கண்டன உரையாற்றினர்.செய்தி தொடர்பாளர்கள் அகமது, சீனுவாசன், சட்டசபை இளைஞர் காங்., தலைவர் ரமணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்று, மத்திய அரசை கண்டித்தும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X