அரசியல் செய்தி

தமிழ்நாடு

20 லட்சம் மாணவருக்கு, 'டேப்' செங்கோட்டையன் தகவல்

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement


திருப்பூர், ''தமிழகத்தில், 20 லட்சம் மாணவ - மாணவியருக்கு, 'டேப்'கள் வழங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருப்பூர், வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 36.50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, கலையரங்கத்தை, அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:
தமிழகத்தில், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, அரசு பள்ளி, மாணவ - மாணவியருக்கு, நான்கு வித சீருடைகள் வழங்கப்படுகின்றன. அடுத்தாண்டு, 'ஷூ'வும் வழங்கப்படும்.
அரசு பள்ளிகளில், எட்டு, ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியர், 20 லட்சம் பேருக்கு, மலேஷியாவில் இருந்து, 'டேப்' வாங்கி வழங்க திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்களை, 'அப்டேட்' செய்ய, ஒவ்வொரு பள்ளியிலும், 'அடல் டிங்கரிங் லேப்' 20 லட்சம் ரூபாய் செலவில், ஐந்து ஆண்டுகளில், அமைத்து தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
23-ஆக-201908:04:28 IST Report Abuse
 Muruga Vel அரசாங்கம் வேல குடுக்கும் ...நீங்க குழந்தைகள் மட்டும் உற்பத்தி பண்ணுவீங்க ...இது எந்த நாட்டிலும் சாத்தியமில்லாதது ...
Rate this:
Share this comment
Cancel
23-ஆக-201903:54:02 IST Report Abuse
ஆப்பு படிச்சு வந்தவங்களுக்கு மிகவும் அவசியமான வேலை வாய்ப்பைத் தவிர எல்லா புண்ணாக்கும் ஃப்ரீயா குடுப்போம். டேப் கள் மேட் இன் மலேசியாவாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X