சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1.23 கிலோ தங்கம் திருச்சியில் பறிமுதல்

Added : ஆக 23, 2019
Advertisement

திருச்சி,சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து, கடத்தி வரப்பட்ட, 1.23 கிலோ தங்கத்தை, திருச்சி கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 'ஸ்கூட்' விமானத்தில், திருச்சி வந்த பயணியரை, கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, திட்டக்குடியைச் சேர்ந்த அன்பழகன், புதுக்கோட்டை, பழனியப்பன் ஆகிய இருவரும், தங்களின் பேன்ட் உள் பாக்கெட்டில், 977 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், நேற்று முன்தினம் இரவு, துபாயில் இருந்து, திருச்சி வந்த, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானப் பயணியரை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அகமது பைசல் என்ற பயணி, தன் ஜட்டியில் மறைத்து, 251 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது.
தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பைசலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மட்டும், 1.23 கிலோ தங்கத்தை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்; இதன் மதிப்பு, 36.65 லட்சம் ரூபாய் என, கஸ்டம்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X