அரசியல் செய்தி

தமிழ்நாடு

தாமிரபரணி கீழ் பகுதி கால்வாய்களில் நீர் திறக்க உத்தரவு

Added : ஆக 23, 2019
Advertisement

சென்னை,திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து, தாமிரபரணி ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள கால்வாய்களில், 26ம் தேதி முதல், தண்ணீர் திறந்து விட, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து, தாமிரபரணி ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள, திருநெல்வேலி கால்வாய், பாளையங் கால்வாய்; துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, மருதுார் மேலக்கால், கீழக்கால், வடக்கு மற்றும் தெற்கு பிரதானக் கால்வாய்களில், 26ம் தேதி முதல், செப்., 14 வரை, தண்ணீர் திறந்து விட, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
இதனால், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருச்செந்துார், துாத்துக்குடி தாலுகாக்களில் உள்ள, கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவை, பூர்த்தி செய்யப்படும். மேலும், 62 ஆயிரத்து, 107 ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X