பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர்களுக்கு சிறந்த சேவைக்கான அரசு விருது

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019
Share
Advertisement

சென்னை: மருத்துவ துறையில், சிறந்த சேவை புரிந்ததற்கான, தமிழக அரசின் விருதை, அப்பல்லோ மருத்துவமனை, இதய மருத்துவ நிபுணர், டாக்டர் செங்கோட்டுவேலுக்கு, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வழங்கினார்.



latest tamil news



மருத்துவத் துறையில், 2018ல், சிறப்பாக சேவை புரிந்த டாக்டர்களுக்கு, விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், நேற்று நடந்தது.இதில், சிறந்த சேவைக்கான விருது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி கண்காணிப்பாளர், திருநாவுக்கரசு, அப்பல்லோ மருத்துவமனை இதய மருத்துவ நிபுணர், செங்கோட்டுவேலு உள்ளிட்ட, 20 பேருக்கு வழங்கப்பட்டது. விருதுகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வழங்கினார். இவர்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் காசோலை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.


latest tamil news



தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட, அரசு தலைமை மருத்துவமனையின், குழந்தைகள் நல டாக்டர், ஆத்மார்த்தன், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின், நிலைய மருத்துவ அலுவலர், உமா மகேஸ்வரி உட்பட, 480 பேருக்கு, சிறந்த டாக்டர்களுக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


பங்களிப்பு:


விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, அமைச்சர், விஜயபாஸ்கர் பேசியதாவது: சிறந்த டாக்டர்களுக்கு விருது வழங்குவது, 2012ல் துவங்கப்பட்டது. டாக்டர்களின் பங்களிப்பு காரணமாக, தேசிய அளவில், குழந்தை மற்றும் தாய் இறப்பு விகிதம், தமிழகத்தில் குறைந்துள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக, சிறந்த மாநிலத்திற்கான விருதை, நாம் பெற்று வருகிறோம்.


முன்னேற்றம்:


பல்வேறு துறைகளில், தேசிய அளவை விட, தமிழகம் முன்னோக்கி பயணிக்கிறது. வரும் காலங்களில், மருத்துவ துறையில், காலி பணியிடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர், பீலா ராஜேஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர், கணேஷ், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர், செந்தில்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X