சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரியில் கடல் சீற்றம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
கடல் சீற்றம், குமரி, மாவட்டம், வீடுகள், தண்ணீர்

நாகர்கோவில்: குமரியில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

குமரி மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. ராஜாக்கமங்கலம் அருகே கடல் சீற்றம் ஏற்பட்டு அழிக்கால் கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்தது. கடலில் மூன்று மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.இதை தொடர்ந்து மக்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை எடுத்து கொண்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். ராஜாக்கமங்கலம்துறை, குளச்சல், மார்ததாண்டம்துறை, வள்ளவிளை, தூத்தூர், இரையுமன்துறை, பூத்துறை கடல் பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இந்த சீற்றம் வரும் நாளை வரை நீடிக்கும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடல் சீற்றத்தால் அழிக்காலில் வெள்ளம் புகுந்தது


மக்கள் மறியல்


கடல் நீர் கிராமத்தை சூழ்ந்தும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வராததை கண்டித்து நாகர்கோவில்-குளச்சல் ரோட்டில் அழிக்கால் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆண்டுக்கு நான்கு முறை இதுபோன்று கடல் சீற்றம் ஏற்பட்டு வேறு வீடுகளிலும், முகாம்களிலும் தஞ்சம் புக வேண்டியுள்ளது எனவும், அதிகாரிகளும், அரசும் அலட்சியம் காட்டுகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதில் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
23-ஆக-201913:32:04 IST Report Abuse
sridhar அதிகாரிகள் வரவில்லை என்றால் ...களை கூப்பிடுங்க.
Rate this:
Cancel
Arul. K - Hougang,சிங்கப்பூர்
23-ஆக-201910:56:40 IST Report Abuse
Arul. K ஆண்டுக்கு நான்கு முறை இதுபோன்று கடல் சீற்றம் ஏற்பட்டு வேறு வீடுகளிலும், முகாம்களிலும் தஞ்சம் புக வேண்டியுள்ளது எனவும், அதிகாரிகளும், அரசும் அலட்சியம் காட்டுகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஏன் அப்புறம் தெரிந்தே அங்கு வீடு காட்டினீர்கள் ?
Rate this:
Cancel
23-ஆக-201909:42:27 IST Report Abuse
ருத்ரா கூடிய வரை நீர் நிலைகளின் அருகே வீடோ குடிசையோ இல்லாமல் தொலைவில் வீடு அமைக்க அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X