வீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (71)
Share
Advertisement

புதுடில்லி: டில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தனக்கு வீட்டில் சமைத்த உணவு தான் வேண்டும் என கேட்டு, கேன்டீன் சாப்பாட்டை சாப்பிட மறுத்து வருகிறார்.



latest tamil news


ஐஎன்எக்ஸ் மீடியாக வழக்கில் ஆக.,26 வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம், தனக்கு கேன்டீன் சாப்பாடு வேண்டாம் எனக் கூறி நேற்று (ஆக.,22) இரவு சாப்பிடாமல் இருந்ததாக சிபிஐ தலைமை அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோர்ட் அனுமதி இல்லாமல் வீட்டு உணவு வழங்க முடியாது என அதிகாரிகள் கூறியதால் சிதம்பரம் சாப்பிடாமல் இருந்ததாகவும், பின்னர் உயர் அதிகாரிகள் அனுமதி அளித்ததன் பேரில் சிதம்பரத்திற்கு வீட்டில் சமைத்த உணவே வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


latest tamil news


இரவு முழுவதும் யாருடனும் பேசாமல் இருந்த சிதம்பரம், அவரிடம் பேச சென்ற சிபிஐ அதிகாரிகள் மற்றும் டாக்டர்களிடம் கோபத்துடன் கடுமையாக பேசி உள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரத்த அழுத்தம் போன்றவை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தரைத்தளத்தில் சிதம்பரம் தங்க வைக்கப்பட்டுள்ள அறையில் 2 சிபிஐ அதிகாரிகள் உடன் உள்ளனர். ஏராளமான சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, சிதம்பரத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் இடைவிடாது கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிதம்பரத்திடம் இரவு முழுவதும் விரிவான கேள்விகள் கேட்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


latest tamil news



அத்துடன் சிதம்பரம் வெளிநாடுகளில் செய்யப்பட்ட பண பரிவர்த்தனை தொடர்பான விபரங்களை அளிக்குள்படி சிபிஐ தரப்பில் 3 நாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட பண பரிவர்த்தனைகள் குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பொருளாதார குற்றம் புரிந்ததன் அடிப்படையில், 2 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக அளித்த நோட்டீசை புறக்கணித்து தொடர்ந்து தலைமைறைவாக இருந்ததாலேயே சிதம்பரத்தை கைது செய்ததாக சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தும் வரும் நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தன்னை காத்துக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று (ஆக.,23) விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-ஆக-201921:29:11 IST Report Abuse
D.Ambujavalli சின்னம்மாவுக்கு சிறையிலேயே வெளியிலிருந்து சாப்பாடு வந்தது. அவர்களே வெளியில் போய் சாப்பாடு சாப்பிட்டு, ஷாப்பிங் செய்தார்களே, இவரின் விசாரணையே இன்னும் முடியவில்லை . சிபிஐ தீர்ப்பு, பின் நீதிமன்ற விசாரணை, அதில் ஒரு பத்தாண்டு வாய்தா
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஆக-201903:47:08 IST Report Abuse
meenakshisundaram இனிமே சிதம்பரத்தின் வீடே 'ஜெயில்' தானே ?அவர் வீடே அதுதானே?
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஆக-201913:06:38 IST Report Abuse
Malick Raja யாரும் யோக்கியர்கள் இல்லை ..யோக்கியமாக இருந்தால் நம் நாடு இப்படி இருந்திருக்காது .. அரசியல் கட்சிகள் எந்த வருமானத்தில் செயல்படுகிறது என்று கேட்டால் நிதி வசூல் .. யாரிடம் என்றால் பெரிய கார்பொரேட் .. அது எதற்க்காக என்றால் கடன் தள்ளுபடிக்கும் மேலும் கடன் வாங்குவதற்கும் என்பார்கள் அதுதான் ஊழல் .. ஊழலில்லாமல் ஒரு அரசியல் கட்சியும் இருக்க வாய்ப்பில்லை அதில் நம்பர் 1. இப்போது ஆளும்கட்சியே என்பதே சரியாகும் .. காலம் பதில் சொல்லும் .. ஒன்றுமில்லாதவர் உயரத்திலும் பின்னர் காணாமல் போவதும் காலசுழற்சியின் விளைவுதான் என்பதும் உலக நியதி அல்லவா ?
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஆக-201910:38:41 IST Report Abuse
Yaro Oruvanஹா ஹா ரொம்ப முத்தீருச்சு போல்ருக்கு.. குமுறி குமுறி பொங்குறத பாத்தா சிப்பு சிப்பா வருது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X