பொது செய்தி

இந்தியா

70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (176)
Advertisement

புதுடில்லி : கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நிடி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.





நாட்டின் பொருளாதார சரிவு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நிதித்துறையும் நெருக்கடியில் உள்ளது. அரசு ஏதாவது செய்தாக வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் நாடு எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்.





யாரும் யாரையும் நம்ப முடியாத நிலை உள்ளது. இதற்கு 2 வழிகள் தான் உள்ளது. ஒன்று, ஏதாவது நடவடிக்கை எடுத்து சகஜ நிலை திரும்ப செய்ய வேண்டும். இரண்டாவது, சில துறைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு எடுக்க வேண்டும் என்றார்.





ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவீதமாக உள்ளது. மார்ச் 31 உடன் நிறைவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவீதம் சரிந்துள்ளது. குறைவான முதலீடுகள், குறைவான உற்பத்தி ஆகியன இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (176)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-ஆக-201906:41:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்தாளு ஒரு ஆன்டி இந்தியன்.. அவ்வளவு தான்.. வேலை முடிஞ்சது..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-ஆக-201906:39:30 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எழுபது ஆண்டுகள் நடந்த ஆட்சியை பற்றி ஒரு நாள் விடாமல் தூற்றி விட்டு, அவங்களுக்கும் மேலே கொள்ளையடித்து கார்ப்பரேட்டை வளர்த்து நாட்டை நடுத்தெருவில் கொண்டு விட்ட கோமாளிகளுக்கு ஜே போடும் பஜனை கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
26-ஆக-201916:42:01 IST Report Abuse
Jayvee அரசு எதாவது செய்ய வேண்டுமென்றால் மீண்டும் கறுப்புப்பணம் தாராளமாக புழங்க சிதம்பரத்திற்க்கு நிதி அமைச்சரின் ஆலோசகர் பொறுப்பை கொடுக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X