பொது செய்தி

தமிழ்நாடு

கோவை பயங்கரவாதிகள் புகைப்படம்: போலீஸ் மறுப்பு

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (72)
Share
Advertisement

கோவை : கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியானது. ஆனால் போலீசார் இதனை மறுத்துள்ளனர்.



latest tamil news



லக்ஷர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் முகாமிட்டு இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை, தமிழக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தது.
ஊடுருவிய பயங்கரவாதியில் ஒருவன் பாக்.,ஐ சேர்ந்தவன் எனவும், மீதி 5 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து கோவையில் காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், விமான நிலையம், மால்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



கோவை மாவட்டம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் மட்டும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் புகைப்படங்களை வெளியிட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது போன்று எந்த படங்களையும் வெளியிடவில்லை என்று போலீசார் மறுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
23-ஆக-201919:22:34 IST Report Abuse
தாண்டவக்கோன் இந்த ரெண்டுல கூடல் முட்டு சந்து "கீரி" எது?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஆக-201917:23:04 IST Report Abuse
Natarajan Ramanathan எனக்கும் ஓரளவுக்கு ஹிந்தி தெரியும் என்பதால் புறநகர் ரயிலில் குறிப்பாக பல்லாவரத்தில் ஏறும் பயணியர் பேசுவது புரியும். நாட்டுப்பற்றே இல்லாமல் அவர்கள் பேசுவதை கேட்க வருத்தமாக இருக்கும்.
Rate this:
Cancel
லிங்கம்,சென்னை அதானே....என்னடா நம்ம உதயநிதி போட்டோ மாதிரி இருக்கேன்னு சந்தேகமா போச்சு.....நல்லவேளை.....!!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X