சிதம்பரம் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (36)
Share
Advertisement

புதுடில்லி: கைதை தவிர்ப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கட்கிழமைக்கு (ஆக.,26) ஒத்திவைப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.latest tamil news


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் ரத்து செய்ததை எடுத்து, அவர் சிபிஐ.,யால் நேற்று முன்தினம் (ஆக.,21) இரவு கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தன்னை கைது செய்வதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அயோத்தி வழக்கு விசாரணை காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது, சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டதால் இந்த மேல்முறையீட்டு மனு செல்லாது என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட், ஐஎன்எக்ஸ் மீடியாக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்திற்கு டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் ஏற்கனவே ஆக., 26 வரை 5 நாட்களுக்கு காவலில் விசாரிக்க அனுமதி கொடுத்துள்ளது. சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்ட காவல் ஆக.,26 உடன் முடிவடைவதால் அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆக., 26 க்கு ஒத்திவைத்தது.

சிபிஐ கைது செய்வதை தடுக்க சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ள நிலையில், அமலாக்கத்துறை கைது செய்வதை தடுக்க தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RR Iyengar - Bangalore,இந்தியா
24-ஆக-201908:53:30 IST Report Abuse
RR Iyengar வழக்கமா ஒருவாரம் போலீஸ் கஸ்டடி கேட்டா 2 நாள் தான் குடுப்பாங்க ... முன்னாள் பொருளாதார புளிக்கு 5 நாள் கஸ்டடி கேட்டதுக்கு 4 நாள் அனுமதி கிடைச்சிருக்கு ... இவனுங்களால எந்தளவுக்கு நீதித்துறை கடுப்பாகி காண்டாகி இருக்கு னு நல்லாவே புரியுது
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
24-ஆக-201900:18:06 IST Report Abuse
வல்வில் ஓரி சாரி சார்..என்கிட்ட ஓரண்டு இழுக்க ஒரு கூட்டம் இங்க இருக்கு...நீங்க எக்குத்தப்பாக கேள்வி கேட்டீங்க..சரி..நம்ம குரூப் ஆளு தான் னு வழக்கம் போல பதில் போட்டேன்..ஆனா ஒங்க கேள்வியை நீங்களே படிங்களேன்... மெகா ஊழல் செய்தவர் அரசின் பிடியில் சிக்கியிருக்கிறார்... அது போலீஸ் பிடித்தாலும் மத்திய துறைகள் பிடித்தாலும் ஒன்று தான்.. எல்லாமே அரசுதான் இந்நபர் பிடிபடாமல் கூட போயிருக்கலாம் அதற்கெல்லாம் அரசை குறை சொல்ல முடியாது. உங்கள் கேள்வி மத்திய துறைகளை கேள்விக்குரியதாக மாற்றுகிறது என்னுடைய கருத்தின் கதாநாயகன் பசி. கதை கரு ஊழல். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். வருத்தம் இழைத்திருப்பின் மன்னிக்கவும்.
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
23-ஆக-201920:20:34 IST Report Abuse
Subburamu Krishnaswamy Here after all leading congress lawyers may stay in the tents in district, special, high and supreme courts. They will knock the doors of the judges frequently. It is the time to eliminate corruption in politics and bureaucracy
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X