பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதத்திற்கு நிதி: கறுப்பு பட்டியலில் பாக்.,

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement

புதுடில்லி : பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF, பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.latest tamil news


பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவது மற்றம் சட்ட விரோத பணபரிவர்த்தனை ஆகியவற்றை தடுப்பதற்காக ஆசிய - பசிபிக் குழுமம் (APG) நிர்ணயித்துள்ள 40 விதிகளில் 32 விதிகளை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்ற FATF மற்றும் APG ஆகியவற்றின் ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsகடந்த 2 நாட்களாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாக்.,ஐ கறுப்பு பட்டியலில் சேர்க்கலாமா என்பது பற்றி 7 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நிதி அமைப்பான FATF இடம் இருந்து பாகிஸ்தான் நிதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கறுப்பு பட்டியலில் இருப்பதை தடுக்க 2019 அக்டோபர் மாதத்திற்குள் பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் சர்வதேச அமைப்புக்களிடம் இருந்து பாக்., நிதி பெற முடியாத நிலை ஏற்படும்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-ஆக-201904:58:39 IST Report Abuse
J.V. Iyer பாகிஸ்தானுக்கும் திமுகவுக்கும் நிறைய ஒற்றுமைகள்
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
23-ஆக-201922:35:17 IST Report Abuse
adalarasan எதிர்பார்த்ததுதான்,ஆனால் சீனா, அரேபியா நாடுகள் போன்றவை, கடன், கொடுக்கின்றனர்?என்ன செய்தாலும், அந்த நாடு, தீவிரவாதத்தை விடாதவாறு உருப்படாது>"தன் வினை, தன்னை சுடும்"
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
23-ஆக-201921:19:43 IST Report Abuse
elakkumanan இது ஒரு காவி தீவிரவாத பிஜேபியின் சதி. மோடி மற்றும் rss இயக்கத்தின் சதி. இந்து தீவிரவாதம் ஒழிக. இந்த ஏரியாவுக்குள், 'அந்த ' கோஷ்டியை சந்தோசப்படுத்தியாச்சு. போதுமாபா. நல்லா சாப்புட்டு, தூங்குங்க. நானே சொல்லிட்டேன், இன்னொரு தடவையும் சொல்லிடுறேன் மோடி ஒழிக. போதுமா. அய்யா சிறுபான்மையினரே, பாதையே இலக்கை நிர்ணயிக்கும். பாதை தவறினால், இலக்கும் தவறும். பாதை தவறிய பாக்கு, இலக்கை அடையவே முடியாது. பாதையை மாற்றினாலன்றி. மோடி ஒழிக கோசம் பாக்குக்கு , எந்த விதத்திலும் வளர்ச்சியை தராது. முடிந்துபோகுமுன், பாதையை மாற்றாவிடில், முடிந்துவிடும். காழ்ப்புணர்ச்சி , வெறுப்புணர்ச்சி ரெண்டுமே வளர்ச்சி, அன்பு ரெண்டுக்குமே ஒத்து போகாது தம்பி. எதிர் திசை பயணம் எதிர் பக்கம் மட்டுமே கொண்டு சேர்க்கும். யோசிக்கணும். பாக்கலாம். ஊதுற சங்கை ஊதி வைப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X