திமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (110)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய கட்சியான திமுக அழைப்பு விடுத்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள், காஷ்மீரில் மோசமான சூழல் நிலவுவதாக கருத்து தெரிவித்துள்ளனர் என பாகிஸ்தான் பத்திரிகையான ‛டான்' செய்தி வெளியிட்டுள்ளது.காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து டில்லியில் திமுக சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் காங்., இடதுசாரி ,

புதுடில்லி: இந்திய கட்சியான திமுக அழைப்பு விடுத்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள், காஷ்மீரில் மோசமான சூழல் நிலவுவதாக கருத்து தெரிவித்துள்ளனர் என பாகிஸ்தான் பத்திரிகையான ‛டான்' செய்தி வெளியிட்டுள்ளது.



latest tamil news



காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து டில்லியில் திமுக சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் காங்., இடதுசாரி , திரிணாமுல் காங்., சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், ராஷ்ட்டிரிய ஜனதா, தேசிய மாநாட்டு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
டான் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய எதிர்க்கட்சிகளில் ஒன்றான திமுக, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இக்கூட்டத்தில் காங்., ராஜ்ய சபா தலைவரான குலாம் நபிஆசாத் பேசுகையில்: காஷ்மீரில் தற்போது ஜனநாயகம் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதனை நாம் அங்கீகரிக்க தவறும் பட்சத்தில் முட்டாளாகி விடுவோம். இங்கு மிக மோசமான சூழலும் கல்லறை போன்ற ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளது.இதனை ஜம்மு காஷ்மீர் அரசு மறைக்கிறது. பத்திரிகைகள் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மையை வெளிக்கொணர வேண்டும். 370 ரத்து புறவாசல் வழியாக கொண்டு வரப்பட்டுள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்திருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது. இவ்வாறு ஆசாத் பேசினார்.


latest tamil news



மார்க்., கம்யூ., கட்சியின் பொது செயலர் சீதாராம் யெச்சூரி பேசுகையில்; காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ள நிலை ஜனநாயகத்திற்கு மீதான பெரும் தாக்குதல். காஷ்மீரியத், ஜம்ஹரியத், வாஜ்பாய் காலத்தில் மீறப்படவில்லை. ஆனால் தற்போது மீறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இந்த கூட்டத்தில் காஷ்மீரில் அமைதி நிலவவும், ஜனநாயகத்தை நிலை நாட்டவும் காஷ்மீர் மக்கள் தங்களின் உறவினர்களுடன் தொடர்பை ஏற்படுத்த வழி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


பாக்.,கில் திமுக புகழ்:


இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், ‛‛பாகிஸ்தான் வரை திமுக புகழ் பரவி விட்டது. திமுகவையே தங்களுக்கு ஆதரவான கட்சியாக பாக்., நினைக்கிறது. இது இந்தியாவில் திமுகவுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என திமுகவினருக்கு புரியவில்லை. நாடு என்று வரும்போது தமிழக மக்கள் கட்சி வேறுபாடுகளை பார்க்க மாட்டார்கள் என்பது கூட திமுக தலைமைக்கு தெரியவில்லை'' என்று வேதனை தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
25-ஆக-201917:39:46 IST Report Abuse
arabuthamilan . இந்த சலசலப்பிற்கெல்லாம் திமுக அஞ்சாது
Rate this:
Cancel
Tamilan - Doha,கத்தார்
25-ஆக-201911:21:45 IST Report Abuse
Tamilan Pakistan பத்திரிகைகள் திமுகவிற்கு முட்டு கொடுப்பது இருக்கட்டும், பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியா பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் "மோடியே மீண்டும் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும்" என்று பிரதமர் மோடிக்கு முட்டு கொடுத்தாரே, அப்பல்லாம் இந்த நோக்கர்கள் கோமாவிலா இருந்தார்கள். அப்ப பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மோடியோடு கூட்டணி வைத்திருக்கிறாரா என்று ஏன் கேட்கவில்லை
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
25-ஆக-201913:11:51 IST Report Abuse
கல்யாணராமன் சு.tamilan, அப்பா காங்கிரெஸ்ஸே கேட்டுச்சு, இம்ரான் கானுக்கும் மோடிக்கும் என்ன தொடர்புன்னு........ அவர் ஏன் மோடியே மீண்டும் பிரதமரா வரணும்னு இம்ரானுக்கு ஆசைன்னு........ அதை நீக்க படிக்கலை போலே இருக்கு ................
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
24-ஆக-201917:27:03 IST Report Abuse
Jayvee இனத்துரோகிகள் எல்லோரும் கை கோர்த்து நிக்கும் ஒரு அருமையான போட்டோ ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X