புதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (126)
Share
Advertisement
பாரீஸ் : புதிய இந்தியாவை உருவாக்கியதில் கர்வம் கொள்கிறேன் என பாரீசில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று (ஆக.,23) பாரீசில் உள்ள யுனெஸ்கோ தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது மோடிக்கு பூர்ணகும்ப மரியாதையுடனும், நாதஸ்வர - மேளம் முழங்க தமிழக பாரம்பரிய முறைப்படியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரீஸ் : புதிய இந்தியாவை உருவாக்கியதில் கர்வம் கொள்கிறேன் என பாரீசில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.latest tamil news


பிரான்ஸ் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று (ஆக.,23) பாரீசில் உள்ள யுனெஸ்கோ தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது மோடிக்கு பூர்ணகும்ப மரியாதையுடனும், நாதஸ்வர - மேளம் முழங்க தமிழக பாரம்பரிய முறைப்படியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. யுனெஸ்கோ அலுவலகத்தில் அதன் தலைவர் ஆண்டிரி அசோவ்லேவை மோடி சந்தித்தார். பின்னர் அங்கு நடைபெற்ற விழாவில் இந்திய வம்சாவளியினரிடையே மோடி உரையாற்றினார்.


latest tamil newsஅப்போது பேசிய அவர், விமான விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் சிறந்த அணு இயற்பியலாளரான ஹோமி பாபாவை இந்நேரத்தில் தலை வணங்குகிறேன். இந்தியா தற்போது முன்னேறி வருகிறது. நாங்கள் வெறும் ஆட்சி மட்டும் நடத்தவில்லை. புதிய இந்தியாவை கட்டமைத்து வருகிறோம். புதிய இந்தியாவை உருவாக்கியதில் கர்வம் கொள்கிறேன். அளித்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றி வருகிறோம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை.


latest tamil news


Advertisement

கால்பந்தாட்ட பிரியர்களின் தேசத்திற்கு நான் வந்துள்ளேன். கோலின் (goal) முக்கியத்துவம் பற்றி உங்களுக்கு தெரியும். அது அளப்பிட முடியாத சாதனை. இதற்கு முன் நடக்கவே முடியாது என கூறப்பட்டவற்றை கடந்த 5 ஆண்டுகளாக இலக்காக நிர்ணயித்து, அதை அடைந்துள்ளோம். புதிய இந்தியாவில் ஊழல், சலுகை, மக்கள் பணத்தை கொள்ளையடித்தல், பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு எதிராக, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பதவியேற்று 75 நாட்களுக்குள் பல திடமான, துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்தியா - பிரான்ஸ் இடையே உறவு நிலையாக உள்ளது. இந்தியாவும் - பிரான்சும் எப்போதும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. உலகிலேயே பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.


latest tamil news
latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (126)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swega - Dindigul,இந்தியா
24-ஆக-201914:05:30 IST Report Abuse
swega புது இந்தியாவா? மறுபடியும் முதலில இருந்தா?
Rate this:
Cancel
sundar -  ( Posted via: Dinamalar Android App )
24-ஆக-201906:14:14 IST Report Abuse
sundar ennathu..puthiya India poranthuducha? sollave illa...Inga enga oorla naanga ellorum wait pannikittu irukkom, aanaa unga naala enakku oru nalla kaariyam nadanthirukku, ippo ennala ethu nalla government, ethu drama government nnu therinjudhuci
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
24-ஆக-201905:49:38 IST Report Abuse
Amal Anandan எந்த வியாபாரத்திலும் 10-20 சதவிகிதத்திற்கு மேல் லாபம் இருக்காது ஆனால் ஒரு குழந்தை பேரு ஜெய்ஷாவாம் ஆயிரம் மடங்கிற்கு மேல் லாபம் பார்த்தாராம் அதை கேள்வி கேட்டால் இந்தியா முழுக்க பொங்குனாங்க அரசு வக்கீலையெல்லாம் அனுப்பினாங்க ஆனா பாருங்க இவங்க ஊழலை ஒழிப்பாங்களாம். கேள்வி கேட்க யாரும் இல்லைனா இவங்க பாடு படு ஜோர் அதுக்குதான் இவ்வளவு பொய்யும் புரட்டும்.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
26-ஆக-201913:46:10 IST Report Abuse
Balajiவெவரம் தெரிஞ்சு பேசோணும். ஆயிரம் மடங்கு லாபம்னு யாரும் சொல்லலே. ஆயிரம் மடங்கு வளர்ச்சி மிகச்சஸில வருடங்களிலேயே என்பது குற்றச்சாட்டு. அதாகப்பட்டது அவர் 50000 மொதல் போட்டு ஆரம்பிச்ச தொழில் 50 கோடி ஆயிடிச்சாம் கொஞ்ச வருஷத்துலயே. எந்த தொழிலும் வளரும் பொது இப்படித்தான் வளரும். இதில் என்ன சந்தேகம்? போகப்போக தான் தேக்கம் ஆரம்பித்து வளர்ச்சி விகிதம் குறையும். அவராச்சி மொதல் போட்டு ஆரம்பிச்சார். இங்கன ஒருசிலர் மொதலே போடாம அசுர வளர்ச்சி அடைஞ்சிருக்காங்களே அதப்பத்தி பேசுங்க ஷாமியோவ். பல லட்சம் கொடிகள்ல புரள்ற எதிர்க்கட்ச்சிகளுக்கு கிடைக்கற ஒரே கத என்னமோ திரும்ப திரும்ப இந்த 50 கோடி பிஜினேஜ் தான். ஹய்யோ ஹய்யோ.. கூவரது கூவரீங்க கொஞ்சம் பெருசா சொல்லி கூவுங்க ஜாமி புண்ணியமோஅப்போவும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X