சிதம்பரத்திற்கு ஜாமின் மறுத்த நீதிபதி சுனில் கவுர் ஒய்வு| Dinamalar

சிதம்பரத்திற்கு ஜாமின் மறுத்த நீதிபதி சுனில் கவுர் ஒய்வு

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (29)
Share
புதுடில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமின் வழங்க மறுத்து தள்ளுபடி செய்த நீதிபதி சுனில்கவுர் ஒய்வு பெற்றார். பஞ்சாபில் 1984 ல் வக்கீல் பணியை துவக்கிய அவர் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர். பிரபல கொலை வழக்கிலும் இவர் ஆஜரான பெருமை பெற்றவர்.கடந்த 2008 முதல் டில்லி ஐகோர்ட் நீதிபதியாக இருந்து வருபவர் சுனில்கவுர் .

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமின் வழங்க மறுத்து தள்ளுபடி செய்த நீதிபதி சுனில்கவுர் ஒய்வு பெற்றார்.latest tamil newsபஞ்சாபில் 1984 ல் வக்கீல் பணியை துவக்கிய அவர் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர். பிரபல கொலை வழக்கிலும் இவர் ஆஜரான பெருமை பெற்றவர்.கடந்த 2008 முதல் டில்லி ஐகோர்ட் நீதிபதியாக இருந்து வருபவர் சுனில்கவுர் . சிதம்பரம் ஜாமினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்த மறுநாள் நேற்று (22 ம் தேதி ) ஓய்வு பெற்றார். இவர் நீதிபதியாக இருக்கும் போது பல வழக்குகளில் பரபரப்பான உத்தரவை பிறப்பிப்பார் என்ற பெயர் எடுத்தவர். காங்., தலைவரான சோனியா மற்றும் ராகுல் மீது தொடரப்பட்ட நேஷனல் ஹெ ரால்டு வழக்கை விசாரித்து உத்தரவுகைள பிறப்பித்துள்ளார். இதன்பிறகே இந்த வழக்கு சூடு பிடித்தது. இந்த அலுவலகத்தை காலி செய்ய சுனில்கவுர் உத்தரவிட்டார். ஆனால் காங்., தரப்பில் சுப்ரீம் கோர்ட் சென்று இதற்கு தடையும் பெற்றனர்.


latest tamil newsஇது போல் சமீபத்தில் மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத் மருமகன் ரசூல் பூரியின் வழக்கில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். இது போல் பண பரிமாற்றம் தொடர்பாக மொய்ன் குரேஷி மீதான வழக்கிலும் சில உத்தரவுகளை வழங்கியவர். இவர் இன்று ஓய்வு பெற்றார்.


மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்


கோர்ட் வளாகத்தில் நடந்த பிரிவு உபசார விழாவில் நீதிபதி கவுர் பேசுகையில்; " சிறப்பான முறையில் பணியாற்றியதாக ஓய்வு பெறும் இந்நாளில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பார் கவுன்சில் ஆகிய அனைவருக்கும் நன்றிகள். என்னுடைய பணி காலத்தில் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள். உங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார் " என்றார் உருக்கமாக.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X