பொருளாதார மாற்றங்கள்: அறிவித்தார் நிர்மலா

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (65)
Share
Advertisement
புதுடில்லி : இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கா, சீனாவை விட இந்தியா பொருளாதாரம் நன்றாக உள்ளது. மந்த நிலை என்ற தகவல் தவறானது என்று டில்லியில் சிறப்பு பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.நிதி நிலை மந்தமாக இருப்பதாக எழுந்த பேச்சின் அடிப்படையில் இது குறித்து விளக்கம் அளிக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடில்லி : இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கா, சீனாவை விட இந்தியா பொருளாதாரம் நன்றாக உள்ளது. மந்த நிலை என்ற தகவல் தவறானது என்று டில்லியில் சிறப்பு பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.latest tamil newsநிதி நிலை மந்தமாக இருப்பதாக எழுந்த பேச்சின் அடிப்படையில் இது குறித்து விளக்கம் அளிக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டில்லியில் நிருபர்களை சந்தித்து பேசினார். அவர் அளித்த பேட்டி:


உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம்

சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தமாக உள்ளது. உலக பொருளாதார மந்தம் என்பது ஒன்றும் புதிது அல்ல. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கா, சீனாவை விட இந்தியா பொருளாதாரம் நன்றாக உள்ளது. மந்த நிலை என்ற தகவல் தவறானது.


ஜிஎஸ்டி முறையில் மாற்றம்

வருமான வரி தாக்கல் அதிகரித்துள்ளது. இந்திய வரி வருமானம் பெருகி உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு ஆய்வுகள் நடத்தி துணிச்சலான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த சீர்திருத்த நடவடிக்கை தொடரும். ஜிஎஸ்டி முறையில் உரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். கம்பெனிகள் பலன் பெறும் வகையில் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான சட்ட திருத்தங்கள் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். தொழில் துவங்கவதற்கான வாய்ப்புகள், மற்றும் வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. வர்த்தகம் பெருக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


latest tamil newsஎளிய முறையில் வருமான வரி தாக்கல் செய்ய எலக்ட்ரானிக் ஆன்லைன் முறை எளிமை படுத்தப்பட்டுள்ளது. அக். 1 முதல் வருமான வரிதுறையில் குற்றம் இழைத்தவர்களுக்கு மின்னஞ்சல் மூலமே சம்மன், நோட்டீஸ் அனுப்பப்படும்.


வங்கிகளுக்கு கூடுதலாக நிதி


தொழில் முனைவோருக்கான கடன் பெறும் வழிகள் எளிமைப்படுத்தப்படும். வங்கி மூலம் கடன் பெறுவோர் எளிய முறையில் வங்கிகளை அணுக முடியும். ஆன்லைன் மூலம் கடன் விண்ணப்பிப்போருக்கு விரைவில் கடன் வழங்கப்படுகிறது. கடன் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். கடனுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.


வீடு, கார் இ.எம்.ஐ., குறைப்புவீடு ,கார் வாங்கும் தவணை குறைக்கப்படும். வங்கிகளுக்கு கூடுதலாக மூல நிதி ரூ. 5 லட்சம் கோடி வழங்கப்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிதியில் பொதுறை வங்கிகளுக்கு ரூ. 70 ஆயிரம் கோடி உடனடியாக வழங்கப்படும். வங்கிகள் ஒரு முறைக்கு மேல் ஆதாரை கேட்க கூடாது என உத்தரவிட்டுள்ளோம். ரெப்போ விகித்துடன் கடன் இணைக்கப்படும். வட்டி விகிதங்களை வங்கிகளே மாற்றுவதால் கடனுக்கான வட்டி குறையும். ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை தொடர்பாக 30 நாட்களில் முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளோம்.


சிவில் நடவடிக்கை

சிஎஸ்ஆர் பங்களிப்பை அளிக்காத நிறுவனங்கள் மீது சிவில் நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும். கிரிமினல் நடவடிக்கை கிடையாது. ஜிஎஸ்டி வழிமுறைகள் இன்னும் எளிமைப்படுத்தப்படும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரியில் சலுகைகள் வழங்கப்படும். ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும்.பழைய வாகனங்களை புதிய வாகனங்களாக மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்படும்.கடனை அடைத்த 15 நாட்களில் சம்பந்தபட்டவர்களுக்கு ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran - Kongu seemai,இந்தியா
24-ஆக-201900:52:44 IST Report Abuse
Cheran நாட்டின் சரியும் பொருளாதாரத்தை சரி செய்வதற்கும், அதை சமாளித்து இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கும் மத்திய அரசுக்கு தெரியவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் மோசமான நிலையை நோக்கி பொருளாதாரம் நகர்கிறது.நிதித்துறை மட்டும் நெருக்கடியைச் சந்திக்கவில்லை, இந்தியப் பொருளாதாரமே நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல் முன்னெப்போதும் இல்லாத சூழலில் இருக்கிறது.கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத சூழலை சந்திக்கிறது இந்த சூழலுக்கும் மறைந்த பிரதமர் நேருதான் காரணம் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நம்புவார்கள். நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருகிறது என்று கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் நாட்டின் பொருளாதார புள்ளிவிவரங்களைப் பார்த்தால் வியப்படையவேண்டும். ஏனென்றால், 3 கோடிக்கும் மேலான மக்கள் வேலையிழக்கும் அபாயத்தை சந்தித்துள்ளார்கள். பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் மிகப்பெரிய அழுத்தத்தில் சிக்கி இருக்கிறது ஜவுளித்துறை கடந்தவாரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் விளம்பரங்களை வெளியிட்டுவருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான காலம். தேயிலைத் தொழிற்சாலையும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு இருக்கிறது
Rate this:
Cancel
Vaanambaadi - Koodaloor,இந்தியா
24-ஆக-201900:01:47 IST Report Abuse
Vaanambaadi மல்லையாவை பிஜேபி ஓட விட்டு விட்டது.... அடுத்த ஸ்டேட்மெண்ட்... சிதம்பரத்தை அநியாயமாக கைது செய்து விட்டது..... டுமீல் குரூப்புகளோட ஸ்பிளிட் பர்சனாலிட்டி இஸ் AT IT'S PEAK... ஒரே காமெடி தான்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஆக-201923:26:35 IST Report Abuse
மலரின் மகள் உண்மையான வளர்ச்சி என்பது கிராம பொருளாதாரம் மற்றும் குடும்ப பொருளாதார வளர்ச்சியே. இவற்றின் வளர்ச்சியில் அரசின் கவனமும் பங்கீடும் சிறப்பாக இல்லையே. நன்கொடை லஞ்சம் தரும் கார்பொரேட் களின் வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொள்வது சரியா. Sensex மட்டுமே புள்ளிவிவரங்களை தந்தால் அதுமட்டும் போதுமா? என்பது சதவீதத்திற்கும் மேல் அரசின் கணக்கீடுகளில் வருவதில்லை. போதையை ஒழித்து காட்டுங்கள் தேசம் தானாக முன்னேறிவிடும் அதுவும் வேகமாக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X