திருப்பதி பஸ்டிக்கெட்டில் சர்ச்சை விளம்பரம்| Haj, Jerusalem Ads On Tirupati Bus Tickets, BJP Hits Out At Jagan Reddy | Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருப்பதி பஸ்டிக்கெட்டில் சர்ச்சை விளம்பரம்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (32)
Share
ஐதராபாத்: ஆந்திராவில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் அரசு பேருந்து பஸ் டிக்கெட்டின் பின்புறம் ஹிந்து அல்லாத ஜெருசலேம் , ஹஜ் யாத்திரை பற்றிய விளம்பரங்கள் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.பா.ஜ. எம்.எல்.ஏ ராஜா சிங், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ஹிந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளதாக பா.ஜ. உள்ளிட்ட கட்சிகள் கடும்
திருப்பதி, பஸ்டிக்கெட்டில், சர்ச்சை, விளம்பரம்

ஐதராபாத்: ஆந்திராவில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் அரசு பேருந்து பஸ் டிக்கெட்டின் பின்புறம் ஹிந்து அல்லாத ஜெருசலேம் , ஹஜ் யாத்திரை பற்றிய விளம்பரங்கள் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பா.ஜ. எம்.எல்.ஏ ராஜா சிங், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ஹிந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளதாக பா.ஜ. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


latest tamil newsஆந்திர மாநில ஓய்.எஸ்.ஆர் காங். கட்சி அறநிலையத்துறை அமைச்சர் வெல்லம்பள்ளி ஸ்ரீனிவாசன் கூறுகையில், பஸ் டிக்கெட்அச்சடிப்பதற்கான ஒப்பந்தத்தை முந்தைய தெலுங்கு தேச அரசு வழங்கியது. அதன் படியே பஸ்டிக்கெட்டில் விளம்பரம் அச்சடிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் அச்சடிக்கப்பட்டது குறித்து போக்குவரத்து துறையிடம் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X