சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

நாய் குட்டி கொடுத்த முகுல்!

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 நாய் குட்டி கொடுத்த முகுல்!

நாய் குட்டி கொடுத்த முகுல்!

முன்னாள் பிரதமர் ராஜிவ், 75வது பிறந்த நாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிற்கு, மத்திய சென்னை மாவட்ட, காங்., பிரமுகரான ரஞ்சன்குமார், நாய்க்குட்டியை பரிசாக வழங்கினார்.அந்த நாய்க்குட்டியை, ஆசையாக கேட்டு வாங்கிய நடிகை குஷ்பு, தன் மடியில் வைத்து, குழந்தை போல கொஞ்சினார். விழா முடிந்ததும், நாய்க்குட்டியை தனக்கே தரும்படி கேட்க, அவரிடமே கொடுத்து விட்டனர்.விமான நிலையத்திற்கு, வழி அனுப்ப வந்தவர்களிடம், முகுல் வாஸ்னிக், 'எங்கே அந்த நாய்க்குட்டி' என்ற அர்த்தத்தில், 'வேர் இஸ் தி பச்சா' எனக் கேட்டார். ரஞ்சன்குமார், 'குஷ்புவிடம் கொடுத்து விட்டோம்' என்றதும், 'ஓகே' என்றபடி, டில்லிக்கு புறப்பட்டு சென்றார்.வழி அனுப்ப வந்த மாநில நிர்வாகி, 'தனக்கு கிடைத்த பரிசை, வேறு யாராவது கேட்டு வாங்கியிருந்தால், முகுல் வருத்தப்பட்டிருப்பார்; குஷ்பு என்பதால் விட்டு கொடுத்து விட்டார்' என்றார்.மற்றொரு நிர்வாகி, 'அது சரி... ரெண்டு பேரும், ஒரே ஊரான மும்பையை சேர்ந்தவர்களாச்சே' என்றதும், மற்றவர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-ஆக-201918:32:47 IST Report Abuse
D.Ambujavalli லட்ச ரூபாய் பெறுமான பொருளைக் கொடுத்திருந்தால் இப்படி விட்டுக் கொடுத்திருப்பாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X