சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ரியல் எஸ்டேட் ஆணைய நியமனங்களில் முறைகேடு!

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
ரியல் எஸ்டேட் ஆணைய நியமனங்களில் முறைகேடு!பெஞ்ச் பெரியவர்கள் மத்தியில் ஆஜரான அன்வர்பாய், ''கூட்டணி போட்டு, சம்பாதிக்கிறாங்க பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார்.''எங்க, யாருவே கூட்டணி போட்டு சம்பாதிக்கா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழகத்துல, 5,200 'டாஸ்மாக்' மதுபான கடைகள் இருக்கு... இந்தக் கடைகளை ஒட்டி, பார்கள் நடத்த, பல மாவட்டங்கள்ல, 'டெண்டர்' விட்டுட்டு
 ரியல் எஸ்டேட் ஆணைய நியமனங்களில் முறைகேடு!

ரியல் எஸ்டேட் ஆணைய நியமனங்களில் முறைகேடு!

பெஞ்ச் பெரியவர்கள் மத்தியில் ஆஜரான அன்வர்பாய், ''கூட்டணி போட்டு, சம்பாதிக்கிறாங்க பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார்.''எங்க, யாருவே கூட்டணி போட்டு சம்பாதிக்கா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழகத்துல, 5,200 'டாஸ்மாக்' மதுபான கடைகள் இருக்கு... இந்தக் கடைகளை ஒட்டி, பார்கள் நடத்த, பல மாவட்டங்கள்ல, 'டெண்டர்' விட்டுட்டு இருக்காங்க பா...''இதை எடுக்கிறதுல, ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க.,வும், ரகசிய, 'டீல்' போட்டுக்கிறாங்க... ரெண்டு தரப்பும் கூடிப் பேசி, பார் டெண்டர்களை பிரிச்சு எடுத்துக்கிறாங்க பா...''அவங்களை தாண்டி, வேற யாரும் பார் எடுத்துடக் கூடாதுங்கிறதுல, தெளிவா இருக்காங்க... இதுக்காக, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளையும் வளைச்சு போட்டுக்கிறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''தம்பி படங்களை போடுறதை தவிர்க்கும்படி, உத்தரவு போட்டிருக்காங்க...'' என, புதிய விஷயத்தை பேச ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''எந்தக் கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தே.மு.தி.க., தலைமையில இருந்து, கட்சிக்காரங்களுக்கு, சமீபத்துல ஒரு உத்தரவு போயிருக்குங்க... 'இனிமே, கட்சியின் போஸ்டர், பேனர், அழைப்பிதழ்கள்ல, நாலுல ஒரு பங்குக்கு விஜயகாந்த் படங்களை போடணும்... அதுல, பாதி அளவு, பிரேமலதா படத்தை போடணும்... மத்த நிர்வாகிகள், யார் படங்களும் இருக்கக் கூடாது'ன்னு சொல்லியிருக்காங்க...''எங்கயும் சுதீஷ் படங்களை போட வேண்டாம்னும் சொல்லிட்டாங்க... இனி, தம்பியின் முக்கியத்துவத்தை குறைச்சு, மகனை முன்னிலைப்படுத்த, பிரேமலதா இந்த முடிவை எடுத்திருக்கிறதா சொல்றாங்க...'' என்றார் அந்தோணிசாமி.''பணியிடங்களை நிரப்பறதுல, நிறைய குளறுபடிகள் நடந்திருக்கு ஓய்...'' என, கடைசி தகவலை, கையில் எடுத்தார், குப்பண்ணா.''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''ரியல் எஸ்டேட் திட்டங்களை கண்காணிக்க, தமிழகத்துல, ஒழுங்குமுறை ஆணையம் இருக்கோல்லியோ... போன, 2017ல தான், இந்த அமைப்பையே ஆரம்பிச்சா ஓய்...''இதுக்கு, முறையா, அதிகாரிகள், பணியாளர்கள் நியமனம் செய்யலை... இதனால, சி.எம்.டி.ஏ.,வுல வேலை பார்த்து, 'ரிட்டயர்' ஆனவாளை, இங்க தற்காலிகமா பணியமர்த்தி, சமாளிச்சிட்டு இருந்தா ஓய்...''இப்ப, ரியல் எஸ்டேட் ஆணையத்துக்கு, 26 புதிய பணியிடங்களை உருவாக்க, அரசு ஒப்புதல் தந்திருக்கு... ''ஆனா, பழைய ஆட்களை வச்சே, பெரும்பாலான இடங்களை நிரப்பிட்டாளாம்... இதுல, நிறைய முறைகேடுகள் நடந்திருக்குன்னு புகார் எழுந்திருக்கு ஓய்...''இது பத்தி, மத்திய - மாநில விஜிலென்ஸ் கமிஷன்களுக்கு புகார் அனுப்ப, வேலைக்காக காத்துண்டு இருந்த பட்டதாரிகள், தயாராகிட்டு இருக்கா... ''சிலர், நீதிமன்றத்துல வழக்கு தொடரவும் முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.கல்லாவை நோக்கி, நாயர் நகர, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-ஆக-201918:36:49 IST Report Abuse
D.Ambujavalli கட்சி பேதமில்லாமல் மது ஆலைகளை நடத்தும் போது விற்பனை, பார் ஒதுக்கீடு என்பதிலும் ஒருமானதாகத்தானே இருக்க வேண்டும் கொள்ளையடிப்பதில் கூட்டணி இதுதான்
Rate this:
Cancel
A R J U N - sennai ,இந்தியா
24-ஆக-201904:06:33 IST Report Abuse
A R J U N ........மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளையும் வளைச்சு போட்டுக்கிறாங்க பா...'' ..விஷயம் அப்படி போகுதோ...இதுலே கட்சியாவது, மண்ணாங்கட்டியாவது .சம்பாதிக்கணும்னு முடிவுப்பணியாச்சு.. அப்புறம்...
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
24-ஆக-201911:59:06 IST Report Abuse
uthappaதமிழர்கள்தானே, சிதம்பரம் வழிதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X