இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (2)
Share
 இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 24, 1972 வெ.ராமலிங்கம் பிள்ளை:
நாமக்கல் மாவட்டம், மோகனுாரில், 1888 அக்., 19ல், பிறந்தார். காந்தியடிகளின் அகிம்சை பாதையில் ஈடுபாடு கொண்ட, இந்திய விடுதலை போராட்டத்தில் தீவிரமாக செயலாற்றினார்; ஒரு ஆண்டு சிறை வாசம் அனுபவித்தார். 'அவளும் அவனும், காதல் திருமணம், மரகதவல்லி' போன்ற புதினங்கள் அவருக்கு புகழ் சேர்த்தன. இவரின், மலைக்கள்ளன் புதினம், எம்.ஜி.ஆர்., நடிப்பில் திரைப்படமாக வெளிவந்தது.'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என, உப்பு சத்தியாகிரக போராட்டத்தை பட்டிதொட்டி எங்கும் பரப்பியவர். சுதந்திரத்துக்கு பின், தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் என்ற பெருமை பெற்றார். 'தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்ற உணர்ச்சிமிக்க வரிகளுக்கு சொந்தக்காரரான, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, 1972- ஆகஸ்ட், 24ல் காலமானார்.அவர் இறந்த தினம் இன்று!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X