'முத்தலாக்' சட்டத்திற்கு எதிரான மனு: விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்பு

Added : ஆக 23, 2019
Share
Advertisement

புதுடில்லி:'முத்தலாக்' சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இதற்கு பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.மனைவியை பிடிக்கவில்லை என்றால், 'தலாக்' என்ற வார்த்தையை, மூன்று முறை கூறி, விவாகரத்து செய்யும் பழக்கம், முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது.
இத்தகைய நடைமுறை செல்லாது என, ஐந்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது; பார்லிமென்டிலும், சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த சட்டத்தின்படி, மூன்று முறை தலாக் கூறும் நபருக்கு, மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும். இதை எதிர்த்து, நான்கு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதிபதிகள், என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி முன், அந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பாக, காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, வழக்கறிஞர், சல்மான் குர்ஷித், நேற்று ஆஜரானார்.
''இந்த சட்டத்தின்படி, முத்தலாக் கூறுவது, தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. மூன்றாண்டுகள் வரை, தண்டனை அளிக்க முடியும். இந்த சட்டத்தின் அதிகார வரம்பையும், செல்லுபடி தன்மையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என்றார் அவர்.இதையடுத்து, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிபதிகள், இதற்கு பதிலளிக்க, மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X