பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி

Added : ஆக 23, 2019
Share
Advertisement

புதுடில்லி:ஆசியா - பசிபிக் பகுதிகளில், பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் நிதியுதவி கிடைப்பதை கண்காணிக்கும் அமைப்பு, பாகிஸ்தான் நாட்டை கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது.
நடவடிக்கைபயங்கரவாதிகளின் நிதி ஆதாரங்களை முடக்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்டுள்ள அமைப்பின், ஆசியா பசிபிக் பகுதிகளுக்கான கூட்டம், ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் சமீபத்தில் நடந்தது.பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் குறித்து, ௪௧ நாடுகளை உறுப்பினர்களாக உடைய, அந்த அமைப்பின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தியா சார்பில், பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாக்., சார்பில் பங் கேற்றவர்கள், பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, பட்டியல் இட்டனர்.எனினும், அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் அதை ஏற்கவில்லை. பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் வைக்க, முடிவு செய்யப்பட்டது.லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற ஏராளமான பயங்கரவாத அமைப்புகளும், ஐ.எஸ்., பயங்கரவாதிகளும், பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.அவர்களின் நிதி ஆதாரங்களை, பாகிஸ்தானால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், உறுப்பு நாடுகளின் உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கடந்த முறை, ஜூனில் நடந்த கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான், 'கிரே லிஸ்டில்' வைக்கப்பட்டது. அடுத்த கூட்டம், அக்டோபரில், பிரான்ஸ் தலைநகர், பாரீசில் நடக்க உள்ளது.
உறுதி
தற்போது. பாகிஸ்தான், கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டிற்கு, பன்னாட்டு நிதி அமைப்புகளிடமிருந்தும் மற்றும் சர்வதேச நிதியுதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அது, அந்நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும். இதனால், பாகிஸ்தான், வேறுவழியின்றி, பயங்கரவாதத்திற்கு எதிராக, உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்பது, இந்த அமைப்பின் நம்பிக்கை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X