அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் உபரி நீர் திட்டம்: ராமதாஸ் வேண்டுகோள்

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 மேட்டூர் உபரி நீர் திட்டம்:  ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:'மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் பயன்பாட்டை அதிகரிக்க, மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:மேட்டூர் உபரி நீர் திட்டம் என்பது, சேலம், நாமக்கல் மாவட்ட மக்களுக்கு, வாராது வந்த மாமணி. அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தங்களின் பாசன தேவையும், குடிநீர் தேவையும் முழுமையாக நிறைவேறும் என, இரு மாவட்ட மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
முதல் கட்டமாக, அவர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றும் வகையில், மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை, மறு ஆய்வு செய்ய வேண்டும்.சேலம் மாவட்டம், ஆத்துார் வரை; நாமக்கல் மாவட்டத்தின் மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம், புதுச்சத்திரம், நாமகிரிபேட்டை, சேந்தமங்கலம், எருமப்பட்டி ஆகிய பகுதிகள் வரை நீட்டிக்கும் வகையில், மறுஆய்வு செய்ய வேண்டும்.அதைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் வசிஷ்ட நதியையும் சேர்த்து, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் வரை, மேட்டூர் உபரி நீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஆக-201911:53:12 IST Report Abuse
Lion Drsekar ஆஹா இவர் இருக்கிறாரா? அரசியலுக்கு குடும்பமே வராது , தவறு செய்பவர்களை முச்சந்தியில் நிற்க வைத்து செருப்பாப்ல அடியுங்கள், என்றெல்லாம் கூறினாரே?? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
mahendra - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஆக-201911:46:02 IST Report Abuse
mahendra திண்டுக்கல் செந்துறை அருகே உள்ள பாம்பாறுக்கும் காவிரிக்கும் உள்ள இடைப்பட்ட தூரம் 70 கிலோமீட்டர் மட்டுமே. காவிரியை பாம்பாறுடன் இணைத்தால் தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களான ராமநாதபுரம்,சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயம் செழிக்கும் மற்றும் வாழ்வாதாரம் மேம்படும். தமிழக அரசு இதை பரிசீலிக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
24-ஆக-201915:09:45 IST Report Abuse
Rajasஇதெல்லாம் யாருக்கு புரியும். இந்த தொகுதிகள் MLA க்கள் ஒரு முறையாவது இது பற்றி பேசியிருக்கிறார்களா. உங்களை போன்ற கருத்துக்கள் இருக்கும் நண்பர்களை சேர்த்து அங்கே எல்லோருக்கும் புரிய வையுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Rajan - singapore,சிங்கப்பூர்
24-ஆக-201907:46:33 IST Report Abuse
Rajan அருமை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X