அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் விவகாரத்தில் தி.மு.க., மவுனமா?

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை:''முன்னாள் அமைச்சர், சிதம்பரம் விவகாரத்தில், தி.மு.க., மவுனம் காக்கவில்லை,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் தொண்டன் பேசுவது போல், தி.மு.க.,வும் பேச முடியுமா; தி.மு.க., - -காங்., இடையே, நல்ல புரிதல் உள்ளது. சிதம்பரம் கைது விவகாரத்தில், தி.மு.க., மவுனம் காக்கவில்லை.தமிழகத்திற்கு யாரால் அவமானம், தலைகுனிவு என்பது, உலகத்திற்கே தெரியும். அ.தி.மு.க., அமைச்சர்கள் போல், பொது வாழ்க்கையில் தாழ்மையடைந்தோர், வேறு யாரும் கிடையாது.
இந்தியாவில், 9 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் காட்டியவர், முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம். குற்றச்சாட்டு சொல்வதால், குற்றவாளியாக முடியாது. சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டுவதால், அது, உண்மையாகி விடாது.ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளில், 99 சதவீதம் பேர் வெற்றி பெறவில்லை என்பது, தேசத்திற்கு பெரும் பின்னடைவு. தரமான ஆசிரியர்களை உருவாக்கினால் தான், தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.சமுதாயத்தின் எதிர்காலம், ஆசிரியர்கள் தான். ஆசிரியர்களே, வெற்றி பெறவில்லை என்றால், மாணவர்களின் நிலை என்னாகும்; இதில், அரசு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
24-ஆக-201921:06:01 IST Report Abuse
Poongavoor Raghupathy சிதம்பரம் an educated Lawyer leaving traces in Shell companies to CBI ED when he has looted along with his son Karti. Kalaignar not an educated DMK Leader was a Master in not getting caught in many of his corrupt dealings. Sarkaria Commission registered their incapability to get the corrupt charges proved against Kalaignar. Sarkaria left records of Scientific and most intelligent corruption by our Muththamil Leader Kalaignar. If Chidambaram decided to loot public money he should have taken Kalaignar's guidance and started his kickbacks. Now all his kickbacks are now kicked him back by CBI ED and the Courts.
Rate this:
Share this comment
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
24-ஆக-201920:58:52 IST Report Abuse
S.BASKARAN திருடனுக்கு தேள் கொட்டின மாதிரிதான் இவர்களின் நிலை. ( மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் )
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
24-ஆக-201919:14:44 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கிரிமினலுக்கு திருடன் என்றுமே தடை போவான். வெட்கங்கெட்ட காங்கிரஸுக்கு மானங்கெட்ட திமுக தடை போகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X