பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி., மேலும் எளிமையாக்கப்படும்: பொருளாதாரத்தை சீர் செய்ய நிதியமைச்சரின் புதிய அறிவிப்புகள்

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (34)
Advertisement
பொருளாதாரம் சீர் செய்ய அறிவிப்புகள்

புதுடில்லி: நாட்டின் பொருளாதார சிக்கல்களை மீட்டெடுக்கும் வகையில், நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.


விரிவான ஆய்வுமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டில்லியில் பேட்டியளித்தார். உலக பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கா, சீனாவை ஒப்பிடும்போது இந்திய பொருளாதார நிலை நன்றாக உள்ளது என்றார்.

ஜி.எஸ்.டி., வரியை மேலும் எளிமையாக்குவது, வங்கி கடன்களுக்கான வட்டி குறைப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் வருமானத்தின் மீதான கூடுதல் வரியை திரும்ப பெறுதல் உள்ளிட்ட, பல முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து, கடந்த சில வாரங்களாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வந்தார்.
உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து மட்டுமின்றி, வங்கி கிளை மேலாளர்கள் வரை, அனைத்து தரப்பினருடைய ஆலோசனைகளையும் பெற்றார்.இதையடுத்து, அவர் பிரதமருடன், விரிவான மறு ஆய்வு கூட்டத்தையும் நடத்தினார்.

இந்நிலையில், நேற்று அவர், பொருளாதார நிலையை சரி செய்வதற்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


நிதியமைச்சர் வெளியிட்ட சில முக்கியமான அறிவிப்புகள்:* எப்.பி.ஐ., எனும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருமானத்தின் மீதான கூடுதல் வரி திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது
* வீடு, வாகன கடன்களுக்கான வட்டி, இனி குறையும். வங்கிகளும், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்துக்கு ஏற்ப, கடன்களுக்கான வட்டியை மாற்றி அமைப்பதை ஏற்றுக் கொண்டுள்ளன
* பொதுத் துறை வங்கிகள், வாடிக்கையாளர்கள் கடனை முழுமையாக கட்டி முடித்த, 15 நாட்களுக்குள்ளாக, ஆவணங்களை திருப்பிக் கொடுத்து விடும்
* மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் பதிவு செய்துள்ள, 'ஸ்டார்ட்- அப்' நிறுவனங்களுக்கு, இனி, 'ஏஞ்சல் டேக்ஸ்' கிடையாது
* நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு பணி மீறல், இனி சிவில் குற்றமாக மட்டுமே கருதப்படும்; கிரிமினல் குற்றமாக கருதப்படாது
* வரி துன்புறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பழைய வரி அறிவிப்புகள் குறித்து, அக்., 1ல் முடிவு செய்யப்படும்
* அனைத்து வருமான வரி நோட்டீஸ்கள் குறித்தும், மூன்று மாதங்களுக்குள் தீர்த்து வைக்கப்படும். பிரதமர் சொன்னது போல, செல்வத்தை உருவாக்கு பவர்களை அரசு மதிக்கிறது. அரசு தீர்வுகளை விரும்புகிறது; வழக்குகளை அல்ல
* ஜி.எஸ்.டி., மேலும் எளிமைப்படுத்தப்படும்
* நுகர்வில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கு மட்டும் ஏற்பட்டதல்ல.
* தற்போதைய உலகளாவிய, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 3.2 சதவீதமாக உள்ளது. இது, மேலும் குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது
* பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் வளர்ச்சி அதிகமாக உள்ளது
* சீன வர்த்தக போர் மற்றும் நாணய மதிப்பு சரிவு ஆகியவை, பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது
* குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், ஜி.எஸ்.டி., பாக்கி, 30 நாட்களுக்குள் வழங்கப் படும்
* பொதுத் துறை வங்கிகளுக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் வழங்கப்படும். இதன் மூலம், பணப்புழக்கம் மேம்படுத்தப்படும்
* வாகனத் துறைக்கு உதவும் வகையில், அரசு அலுவலகங்கள் புதிய வாகனங்களை வாங்குவதற்கு இருந்த தடை நீக்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
27-ஆக-201913:23:32 IST Report Abuse
K.P  SARATHI சேவை வரி (gst ) 18 இல் இருந்து 14 ஆகா குறைக்கவேண்டும். மேலும் GST மொத்தம் INVOICE VALUE இருக்க கூடாது அதில் செலவினங்களை குறைக்கவேண்டும். job ஆர்டர் எடுக்கும் சிறு பட்டறைகள் GST கூடாது. வங்கியில் 10 laksh வரை எந்த கேள்வியும் கேட்ட்க கூடாது. 50 பேர் வேலை நிறுவனத்துக்கு அரசு எந்த நெருக்கடி கொடுக்க கூடாது
Rate this:
Share this comment
Cancel
RAMESH - CHENNAI,இந்தியா
26-ஆக-201916:13:28 IST Report Abuse
RAMESH Actually the Finiance Minister should be Puyus Goyal. how Modi gave this biggest post to this lady?
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
24-ஆக-201923:45:49 IST Report Abuse
Anandan அருண் ஜெட்லீ என்ற விதையை போட்டார்கள் பின் நிர்மலா சீதாராமன் என்று மரம் வளர்ந்தது என்ன பொருளாதார அறிவு கொஞ்சமும் இல்லை. இன்னும் இவங்களுக்கு முத்துகுடுப்பாங்க பாருங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X