பிரிவினைவாதிகள் பேரணி நடத்த திட்டம்: ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஸ்ரீநகர் மீண்டும் கட்டுப்பாடுகள்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், கடந்த சில நாட்களாக, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அமைதி திரும்பி வந்த நிலையில், பேரணி நடத்த பிரிவினைவாதிகள்திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.


பிரிவினைவாத இயக்கம் அழைப்பு

மேலும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து, அங்கே மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ் மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு பகுதிகளில், கடும் கட்டுப்பாடுகள் அமலாகின.
கடந்த சில நாட்களாக, இந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப் பட்டு வந்தன. பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட துவங்கின. ஆனால், செல்போன் சேவை மற்றும் இன்டர்நெட் சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள, ஐ.நா., ராணுவ கண்காணிப்பு குழு அலுவலகத்துக்கு பேரணியாக செல்ல, பிரிவினைவாத இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக, பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், வீடு வீடாகச் சென்று, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.இதைத் தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில், மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


கர்தார்புர் பாதை தயார்



பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி, நேற்று கூறியதாவது:இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உள்ளது. இருந்தாலும், பாகிஸ்தானின் கர்தார்புரில் உள்ள குருத்வாராவுக்கு, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் இருந்து, சிறப்பு பாதை அமைக்கும் பணி திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்களை வரவேற்கத் தயாராக உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
27-ஆக-201904:33:27 IST Report Abuse
Nagarajan Duraisamy இப்போது தான் இந்தியா கட்டுப்பாட்டில், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வந்த பகுதியாயிற்றே ? எல்லோரையும் பிடித்து சுதந்திரமாக அந்தமானை பாருங்கள் அழகு என்று அழைத்து செல்லலாமே ? அங்கு செய்யட்டும் பிரிவினை, செய்வினை எல்லாம்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஆக-201915:57:07 IST Report Abuse
Endrum Indian இதுவரை தீவிரவாதிகள் கட்டுப்பாடில் தான் இருந்தது. இப்போ தான் இது இந்தியாவின் ஒரு UT ஆயிருக்கின்றது. ஆகவே இன்னும் நிறைய கட்டுப்பாடு கொண்டு வந்து அவர்களை நல்வழியில் பயணிக்க வைக்க வேண்டும்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
24-ஆக-201908:39:34 IST Report Abuse
blocked user பேரணி, ஊரணி நடத்தினால் மொத்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீருக்குள் தூக்கிப்போட்டுவிடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X